Thursday 31 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறலை சரி செய்ய உதவும் உணவு !*

நமது உடலின் தட்பவெப்ப நிலையை சமன் செய்வது நரம்பு மண்டலம். இந்த நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் முரண்படும் போது நுரையீரல் மற்றும் இரைப்பையில் மாற்றம் நிகழும் அதாவது குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் சாப்பிட்ட பின்பு உண்டாகும் வயிற்று வலி இவற்றிலிருந்து விடுபட கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
கொத்தவரங்காயில் இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது.
கொத்தவரங்காய் (5), பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்), புடலங்காய் (50 கிராம் - தோல், விதையுடன்), மூன்றையும் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), தக்காளி (1) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி, வடிகட்டி காலை மற்றும் மாலையில் குடித்து வரவும். பின்பு வழக்கமாக உண்ணக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

No comments:

Post a Comment