Monday 25 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வழி காட்டும் நல் எண்ணங்கள்....
உங்களை சுற்றி எப்போதும் நல்ல உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும் ஏற்படுத்த எளிய முறைகள்....
.
1. உங்களுக்கு என்ன வேண்டுமோ , அதில் மட்டும் உங்கள் கவனத்தை மனதார உண்மையாக செலுத்துங்கள்..
.
2. உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மட்டும் மனதார உண்மையாக செய்து கொண்டே இருங்கள்.
.
3. எப்போதும் சின்ன விசயத்தில் கூட நேர்மறையாக பேசி பழகுங்கள்..அது ஒரு நல்ல கலை..பூக்களை பறிக்க வேண்டாம் என்று சொன்னால் ..நமக்கு பறிக்க தான் தோன்றும். மூளை அவ்வாறே புரிந்து கொள்ளும்..
.
அதற்கு பதில் அழகான பூக்கள் உங்களுக்காக பூத்திருக்கிறது என்று கூறினால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.
.
4. நியூஸ்பேப்பரில் நேர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும் செய்திகளை படியுங்கள்,
.
5. டிவியில் நேர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையே பாருங்கள்
.
மற்றவர்களை குறைசொல்லி கொண்டிருப்பதை விட அவர்களிடம் இருக்கும் சின்ன சின்ன நல்ல விசயங்களுக்கு பாராட்டுங்கள். மற்றவர்களை மன்னியுங்கள்...
.
6. அறிவு பொக்கிஷங்களையும், நல்ல பாடல்களையும் மட்டுமே கேளுங்கள், பாருங்கள்...
.
7. நீங்கள் எதற்கெல்லாம் நன்றி உடையவர்களாக இருக்கிறேர்களோ அவற்றையெல்லாம் மனகண்ணில் காட்சியாக உணர்ந்து அதற்கு மனதார அடிக்கடி நன்றி கூறுங்கள்..
.
உங்களிடம் நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க உங்களிடம் நல்ல உணர்வுகள் அதிகரிக்கும்.
.
8. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.....அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்..
.
9. எப்போதும் உங்கள் பேச்சினை தொடங்கும்போது நன்றி சொல்லி தொடங்குங்கள்...
.
ஒரு இடத்திற்கு போகும் முன்னர் மூன்று முறை நன்றி சொல்லி செல்லுங்கள்...
.
நன்றி என்னும் மாயாஜாலம் நீங்கள் செல்வதற்கு முன்னே அங்கு அற்புதமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கும்
.
நன்றியுணர்வு உங்கள் அணுகுமுறை ஆகும்வரை பயிற்சி செய்து கொண்டிருங்கள்
.
இவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை அற்புதமாக மாறும்...

No comments:

Post a Comment