Monday 11 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மாநில உரிமைகள் பறி போனது யாரால்
எப்போது.........
தான் பதவி அரிப்பை தீர்த்துக்கொள்ள நாட்டில் அவசரநிலை கொண்டுவந்து இந்திரா தலைமையிலானா காங்கிரஸ் ஐ அரசு
அதை அன்று எதிர்த்த கட்சி திமுக 
“…அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை…” என்று சாடியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. மேலும்
மிசாக் கொடுமைக்காரி, சேலை கட்டிய ஹிட்லர், முசோலினி…” என்று, இந்திராவை சாடினார் , முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” போட்டார். “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, எழுதினார்.
.
இன்று கேட்கிறார்கள் இது என்ன சர்வாதிகார நாடா என்று ..
அனிதாவின் படுகொலைக்குக் காரணமே, மாநில அதிகாரங்கள் பட்டியல் பிரிவு-11ல் இருந்த கல்வியை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பொதுப் பட்டியலுக்கு எடுத்துக் கொண்டதுதான்.
தன் சொந்த காரணங்களுக்காக அவசர நிலை பிறப்பித்த அந்த சர்வாதிகாரி, 1976 டிசம்பர் 18ல் அரசியல் சாசன 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் இதைச் செய்தார். மருத்துவக் கல்வி உள்பட உயர்கல்வித்துறையே மாநிலங்களின் கைவிட்டுப் போனது.
மீண்டும் காங்கிரஸ் செய்த தவறு
2013ல் இந்திய மருத்துவக் கவுன்சில் "நீட்" நுழைவுத் தேர்வை அறிவித்தது.
அதை எதிர்த்து சில கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடியது
இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்ததில், நீதிபதி அனில் தவே தவிர நீதிபதிகள் அல்டாமஸ் கபீரும் விக்கிரம்ஜித் சென்னும் கிறிஸ்தவக் கல்லூரிக்கு ஆதரவாக "நீட்"டை விலக்கித் தீர்ப்பளித்தனர்.
நீட் தேவையில்லை என்று உச்ச நீதி மன்ற உத்தரவுக்கு , அன்றைய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு அமைச்சர் குலாம் நபி சீராய்வு மனு போட்டார்.
இதனை விசாரித்த அனில் தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, "நீட் கட்டாயம்; அடுத்த கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த வேண்டும்" என 2016ல் ஏப்ரல் 11ல் தீர்ப்பளித்தது. அப்போது இந்த 2016-17 கல்வி ஆண்டுக்கு மட்டுமாவது "நீட்"டிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழகமும் வேறு சில மாநிலங்களும் கேட்க, இது ஏற்கப்பட்டது.
வேலியில் ஓடின ஒண்ணானை எடுத்து தமிழன் வேஷ்டிக்குள் விட்டது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு .
அன்று அதை மவுன சிங்கோடு , மவுனமாக ஆதரித்த விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட்கள் , இன்று ஓலமிடுகிறது , ஒப்பாரி வைக்கிறது .
எந்த நீதி மன்றம் தேவையில்லை என்று சொன்னதோ அதை அப்படியே விட்டு இருக்கலாம் , தேவையில்லாது சீராய்வு மனுவை போட்டு , அதே நீதி மன்றம் மூலம் நீட் தேவை என்று உத்தரவை போடா வைத்தவர்கள்
இன்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்
நீங்கள் செய்த மனுவே அனிதாவின் மரணத்துக்கு காரணம் ..
மூடி கொண்டு இருங்கள், கிளறினால் நாறிவிடும் ..

No comments:

Post a Comment