Monday 11 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு பெண்ணின் கனவு மற்றொருவரின் தவறினால் நிறைவேறாமல் போனால் அது மன்னிக்க முடியாத குற்றம் என்பதனை அனிதாவின் மரணம் தெரிவிக்கிறது.
அந்த வகையில் நர்சிங் கோர்ஸ் படித்து சிறப்பாக மருத்துவ செவிலியர் சேவை செய்ய வேண்டும் என கனவு கண்டிருந்த சகோதரி தாரணியின் தலையில் கோவை சோமனூர் பேருந்து நிலைய கான்கிரீட் கூரை விழுந்து நிறைவேற்ற முடியாமல் செய்திருக்கிறது.
அனிதா தன் முடிவை தானே தேடினாலும் அவளை நீட் கொலை செய்தது என குற்றம் சாட்டினால் ...
தாரணியை கொலை செய்தது அரசின் அலட்சியப் போக்கும் நகராட்சியின் தவறும் தான் என குற்றம் சாட்ட வேண்டும்.
ஆனால் சமுதாயம் முன்னதை கொலை என்றும் பின்னதை விபத்து என்றும் சொல்கிறது.
அனிதாவிற்காவது நான்கு உடன்பிறப்புகள். அதில் ஒருவர் ஐஏஸ் கோச்சிங் எடுக்கிறார். இன்னொருவர் பேங்க் கலெக்ஷன் மேனேஜர். மற்ற இருவர் பிஇ பட்டதாரிகள். தந்தை உண்டு. சிற்றன்னையும் உண்டு. பள்ளி சென்று வர டூவீலர் உண்டு.
ஆனால் தாரணிக்கு ....?
விபத்தில் தந்தை இறந்து விட்டார் . உடன்பிறப்புகள் கிடையாது. தகப்பனார் சாகும் தருவாயில் மனைவியிடம் "நர்சிங் கோர்ஸ் படித்து நர்சாகும் மகளின் கனவை நிறைவேற்று!" என உயிர் விட தாயார் தனித்து நின்று மகளின் கனவை நிறைவேற்ற படிக்க வைக்கிறார். டூவீலர் இல்லாததால் பஸ்ஸில் பயணம்.
கனவுகளை சுமந்து பேருந்திற்கு நிற்கையில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரை எடுத்திருக்கிறது. நகராட்சி நிர்வாகத்தின் ஊழலால் நடந்த ஒரு உயிரிழப்பு.
நாடு நல்ல மருத்துவரை இழந்து விட்டது என கூப்பாடு போடும் நாக்குகள் நாடு நல்ல நர்சை இழந்து விட்டது என ஏன் கூப்பாடு போடவில்லை?
முன்னதிலும் அரசியல்...!
பின்னதிலும் அரசியல் ...!
இடிந்து விழுந்த மேற்கூரை ஏன் பராமரிக்கப்படவில்லை? கட்டிய பொறியாளர் எத்தனை ஆண்டு காலம் ஸ்திரத்தன்மைக்கு உறுதி கொடுத்திருந்தார்? கான்டிராக்டர் கமிசன் தொல்லை இல்லாமல் கட்டினாரா? என்பது போன்ற கேள்விகளை ஏன் எந்த அரசியல்வாதியும் எழுப்பவில்லை?
எழுப்ப மாட்டார்கள் ....!
எழுப்பினால் நாளை அவர்களின் கட்சிக்கு நிதி கிடைக்காது. அதனால் நீதி செத்ததைப் பற்றி கவலைப்பட முடியாது. சரி! அரசியல்வாதிகள் தான் அப்படி! பொங்கும் இளைய தலைமுறை போராளிகள் ஏன் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை?
நடத்த மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் மூளை புரோக்கிராம் செய்யப்பட்டுள்ளது. அதை தாண்டி சிந்திக்காது. அரசியல்வாதிகள் சுட்டிக் காட்டினால் மட்டுமே நியாய, அநியாயங்களை அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் ...! வெட்கம்.
நீட் தேர்வு தகுதியில் தகுதியற்ற ஒருவருக்கு மரணம் என்றால் கூரை விழுந்ததில் தகுதியுற்ற நபருக்கு தகுதியற்ற ஒன்றினால் மரணம்.
அனிதாவின் உயிரிழப்பிற்கு அரசு ஏழு லட்சம் அறிவித்ததும் அந்த தொகை வேண்டாம் என அறிவித்த ஒரு தலைவர் அடுத்த நிமிடமே ஒரு கோடி வேண்டும் என ஏலத்தை ஆரம்பிக்கிறார். அந்த ஏலம் தாரணிக்கு இல்லாமல் போனது ஏன்?
பாவிகளா..!
இந்த பூமியில் நீதீயை கூட ஜாதியை வைத்தே அளக்கிறார்கள். ஒரே மாதிரியான மரணம். ஒரே துறை! ஆனால் இருவேறு அணுகுமுறைகள். இதில் ஊடகங்களும் ஊமைகளாகிப் போனது கொடுமை.
போகட்டும்! இளைய தலைமுறையே ..
உன் போராட்டம் நீதிக்காக என்றால் தாரணிக்கும் போராடு. நிதிக்காக என்றால் ...அப்படி ஒரு அவமான அரவணைப்பு நல்ல பிணங்களுக்கு தேவையில்லை.
இனியாவது நீங்கள் அநீதியை அடையாளம் கண்டு கொண்டு போராடுங்கள்! கபாலத்திற்குள் மூளை என ஒன்றிருந்தால் ..!
நன்றி முத்துக்குமாரசாமி

No comments:

Post a Comment