Wednesday 27 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 *பிறப்புக்கு முன்னாலும், இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே ! உன்னை நான் வணங்குகிறேன்!..*
மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றாலே அலைக்கழிக்கப்படுவது போல மண்ணிலே விழுந்து நானும் அலைக் கழிக்கப் படுகின்றேன்!
எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப் பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால் . அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என் மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு .
நான் அரக்கனாக இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன் ,அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்து விடு!
நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னை தவிர வேறு காரணம் இருக்க முடியாது . என் அறிவு சிறியது . உன் ஆட்சி பீடம் பெரியது!
அகந்தை . ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால் . இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும்!
இனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா! எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்கா வண்ணம் அருள் செய்!..
*கவியரசர் கண்ணதாசன்...*

No comments:

Post a Comment