Thursday 28 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இஸ்லாமிய நாடாக இருப்பினும் துருக்கியில் சட்டப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்பதே கடைபிடிக்கப் படுவதாக எங்கள் வழிகாட்டி சொன்னார்.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அதிகாரமுண்டாம். பெண்ணின் கொடுமையிலிருந்து தப்பிக்க அதோ அந்த பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டவர்கள் பலர் என்றார். இருப்பினும் தனது மனைவியைப் போலவே பெரும்பாலான பெண்கள் தங்களது கணவனின் மீதும் குடும்பத்தின் மீதும் அன்பைப் பொழிபவர்கள்தானாம்.
கல்லூரி படிக்கும் போது இராணுவப் பயிற்சி கட்டாயமாம்.
இந்தியாவிலிருந்து சென்ற கோகினூர் வைரங்களும் தங்க ஆபரணங்களும் காட்சியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அரண்மனைத்தூணின் குழியில் கட்டைவிரல் வைத்துச் சுற்றி வந்தால் நல்லது நடக்கும் என்பதைப் போன்ற நம்பிக்கைகள் பல அவர்களிடமும் இருக்கிறது!
இன்று உலக சுற்றுலா தினம்!

No comments:

Post a Comment