Monday 18 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ரொம்பவும் யோசிக்காதீங்க:
---------------------------
தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-
அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?
தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-
அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?
தினமும் 2 மணி நேரம நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-
அப்படியென்றால திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டா, உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்-
அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?
எனவே நீங்கள் அதிகமாக யோசித்து மண்டையைப பிச்சுக்காம, நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள் அதுதான் நல்லது.
நன்றி தி௫ வெங்கடசாமி

No comments:

Post a Comment