Monday 11 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*இலவசங்களைப் பெறும் தமிழக மக்களிடம் ஓர் நேர்காணல்.*
🌺🌺🌺🌺🌺🌺
1. பள்ளியில் சேர்வதற்கான அட்மிஷன் இலவசம்
*தமிழக மக்கள்:* வேண்டாம்.
2. படிப்பதற்கு பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்புக் இலவசம்.
*தமிழக மக்கள்:* வேண்டாம்
3. தரமான உணவு, உடை, தங்கும் இடம் இலவசம்.
*தமிழக மக்கள்:* வேண்டாம்
4. உயர்தரக் கல்வி நவீன லேப் (LAB) வசதிகளுடன் இலவசம்.
*தமிழக மக்கள்:* வேண்டாம்
மேலே குறிப்பிட்ட அனைத்து இலவசங்களையும் தருகின்ற நவோதயாப் பள்ளியை வேண்டாம் என்கிறது தமிழக அரசு.
*இப்பொழுது தமிழக அரசு தருகின்ற இலவசங்களைக் குறித்துக் கேள்வி*
👉👉👉👉👉👉
1. மிக்ஸி இலவசம்
*தமிழக மக்கள்:* வேண்டும்.
2. கிரைண்டர் இலவசம்.
*தமிழக மக்கள்:* வேண்டும்.
3 .மேசைக்காற்றாடி(Table Fan) இலவசம்.
*தமிழக மக்கள்:* வேண்டும்.
4. கைப்பேசி இலவசம்.
*தமிழக மக்கள்:* வேண்டும்.
மேலே கூறப்பட்ட அத்தனையையும் இலவசமாகப் பெற்றுக் கொண்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்த பின்பும் தரமானக்கல்வி கிடைக்காமல், *பிற மாநிலத்து மாணவர்களோடு போட்டி போட முடியாமல் திகைத்து நிற்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நிலைமையை நினைத்து கண் கலங்கி நிற்கும் தமிழக பெற்றோர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதே.*
ஆகவே எல்லோருக்கும் திருப்தியளிக்கின்ற தரமானக் கல்வியை *இந்தியாவில்* உள்ள எல்லா மாநிலத்து மாணவ மாணவியருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கின்ற *நவோதயாப் பள்ளியை* தமிழகத்திலும் கொண்டு வருவதற்கு நாம் *தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.*
👉 *இலவசமாகத் தருகின்ற நவோதயாப் பள்ளியை வரவிடாமல் தடுக்கின்ற சட்டங்களைத் தகர்த்தெறிவோம்.*
👉 *இன்னும் மீசையை முறுக்கிக் கொண்டும், வீம்பு பேசிக் கொண்டும், வீராப்புக் காட்டிக் கொண்டும் நவோதயாப் பள்ளியை வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்ற வீணர்களின் பேச்சுக்களைப் புறந்தள்ளி விட்டு, நவோதயாப் பள்ளியை தமிழகத்தில் மாவட்டந்தோறும் நிறுவும் படி தமிழக அரசை வலியுறுத்துவோம்.*
👍👍👍👍👍👍👍
*நாம் பெறுகின்ற இலவசங்கள் பெரியதா இல்லை இலவசக் கல்வி பெரியதா?* சிந்திப்போம்.
*கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப்புகினும் கற்கை நன்றே*என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க, இலவசங்களைப் பெறுவதைப் பார்க்கிலும், இலவச உயர்தரக் கல்வியைத் தருகின்ற *நவோதயாப் பள்ளியை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதற்கு தமிழக அரசை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.*
*இன்று இல்லை என்றால் என்றும் இல்லை. இப்பொழுது இல்லை என்றால் இனி எப்பொழுதும் இல்லை*
🌱🌱🌱🌱🌱🌱🌱
*உதயமாகட்டும்* நவோதயாப் பள்ளி தமிழகமெங்கும், உயரட்டும் நமது மாணவ மாணவியரின் உயர் தரக் கல்வி .
🎺🎷🎺🎷🎺🎷🎺
*பகிர்வோம் இப்பதிவை உலகமெங்கும். நீங்கள் பகிருகின்ற இப் பகிர்வு தான் நாளை தமிழக அரசை நவோதயாப் பள்ளியை தமிழ் நாட்டில் நிறுவும் படிபணிய வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.*
🛎🛎🛎🛎🛎🛎🛎

No comments:

Post a Comment