Monday 26 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே!!!என்ற தகவலை படித்த போது வேதனை அடைந்தேன்... கடற்கரைபகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் 30 கோடி மரங்கள் இருந்தது...இன்று நான்கு கோடி மட்டுமே..
கஜா புயலால் 7 மாவட்டங்கள் அடியோடு சிதைந்து கிடக்கிறது. காற்றின் வேகத்துக்கு இவ்வளவு பலமா என எண்ணி பார்க்கும் போது அதையும் முன்னோர்கள் சமாளித்த விதம் வியப்பை தருகிறது. ஆழிப் பேரலையை சமாளிக்கு திறன் பனைமரத்துக்கு உண்டு என்பதை அறிந்த முன்னோர்கள் கடலோர மாவட்டங்களில் ‘பனைக்கு பத்தடி’ என்ற முறையில் வளர்த்துள்ளனர். கோடிக்கணக்கான பனை மரங்கள் அணிவகுத்து நின்ற தமிழக கடற்கரையோரங்களில் இன்று தேடி பார்த்தாலும் ஒரு பனை மரத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு வெட்டி அழித்துவிட்டனர். அதன் பாதிப்பு தான் இன்று புயல் போன்ற இயற்கை சீற்றங்களை சமாளிக்க முடியாமல் கடலோர மாவட்டங்கள் தவிக்கும் நிலை உள்ளது.
பனை மரங்கள் அழிவுக்கான காரணங்களை பார்க்கும் போது அதிர்ச்சி தருவதாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. கள் விற்பனை சூடு பிடித்தால் மது விற்பனை குறைந்து விடும் என கருதி தமிழக அரசும் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வேதனைக்குரிய ஒன்று.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கள் எடுக்க தடை சட்டம் கொண்டு வந்து மக்களை டாஸ்மாக்இல் தள்ளி காசு பார்க்கிறது..
சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானோ புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை.
மற்ற மரங்களை எல்லாம் சுருட்டி வீசியிருக்கிறது. ஆனால் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் பனை மரம் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட பனை மரத்தின் அருமை பெருமைகள் தெரியாமல் வேட்டையாடி வருகிறார்கள்.
திட்டம்போட்டு மக்களை ஏமாற்றும் கட்சிகளை இனம் காண்போம்...
பனைமரத்தை காப்போம்
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

No comments:

Post a Comment