Monday 26 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முயற்சியும்,பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயமே!
வெறும்,முயற்சி பயிற்சி இருந்தால் போதாது.திட்டமிடுதலும்,கடுமையான உழைப்பும் அவசியம்.இவையனைத்தும் இருந்தாலும் கூட தோல்வி நேரலாம்.
இந்த தோல்வி எதனால் ஏற்பட்டது என மறுபரிசீலனை செய்து,அதாவது தோல்வியில் இருந்து பாடம் பயின்றால் வெற்றி அடையலாம்.
சிந்தனைக் கவிஞர்
கவிதாசன் அவர்கள் வெற்றிக்கு தாரக மந்திரம் முயற்சி என்றாலும்,முயற்சியை முன்னிருத்தி கடுமையாக உழைக்க வேண்டும்.
உழைப்பின் வெளிப்பாடு வியர்வையில் தொடங்கும்.
வெற்றி என்னும் வாசலை திறக்கும்
சாவியாக உழைப்பைச் சொல்கிறார்.
ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால்
திட்டமிடுதலை சரியாக செய்ய வேண்டும் எனக் கூறும் கவிஞர்,அதனை,
திட்டமிட்டு தோற்பதில்லை....
திட்டமிடுவதில்
தோற்கிறாய்..!
திட்டமிடுவதில் தோற்பதென்பது
தோற்றுப் போகத்
திட்டமிடுவது!
என முறையான திட்டமிடலுக்கு வழி கூறுகின்றார்.
நொடிகள் தோறும் படிகள் ஏறத் திட்டமிடு..!
தினம் தினம் திட்டமிடு!
கனவுப் பறவையின் இலட்சிய முட்டையிலிருந்து வெற்றிக் குஞ்சுகளை வெளியில் எடுக்கத் திட்டமிடு...!
என்று வழியும் காட்டுகின்றார்.
திட்டமிடுதலில் இருந்து தோற்றாலும்,அதில் இருந்து பாடம் கற்று,மீண்டும் எழுந்து வெற்றி பெறவேண்டும்
என்பதை நம் கவிஞர் கூறும் போது,
விழாமல் இருப்பதல்ல வெற்றி,
ஓவ்வொருமுறையும் வீழும் போதும்
வீறுகொண்டு எழுவதே வெற்றி என. மறுவெற்றிக்கு
ஊக்கம் அளிக்கின்றார்.
ஆம்!கடும் உழைப்பு,திட்டமிடுதல்,தோல்வியில் இருந்து பாடம் என சிந்தனைக் கவிஞரின் காந்த வரிகளை மனதில் இருத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்.வாழ்த்தும்.டாக்டர் கோவை கிருஷ்ணா.

No comments:

Post a Comment