Saturday 24 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அசலைத் தெரிந்து கொள்வோம்!
போலிகளைப் புறக்கணிப்போம்.
கண்ணாடி துகள்களையும் கூட கற்கண்டாய் பார்த்துப் பழகிய உலகம் ...!
அசலுக்கும்,போலிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கும் ..!
உங்களை நேசிப்பவர்கள் மிகவும் எளிமையானவர்களாகவும்,அன்பானவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் உங்கள் மனதில் அவர்கள் மீது வீணான எண்ணம் சந்தேக கண்ணோட்டத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்.
இடையே உங்களை
கவிழ்ப்பதற்காகவே இனிக்க,இனிக்க பொய் பேசும் நபர்களை நம்பி வாழ்க்கையை தொலைத்து விட்டு பின்னர் வருத்தப் படுவீர்கள்.
காரணம்,அவர்களின் கவர்ச்சிகரமான பேச்சில் காந்தமாய் ஒட்டிக்கொள்வீர்கள்.
வாழ்க்கையின் வெற்றிக்கு உங்களை அழைத்துச் செல்லும், நம்பியவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்;
வாழ்வில் நடிப்பவர்களுக்கு இடம் அளிக்காதீர்.
உங்களுக்காக உழைப்பவர்களிம் விசுவாசமாக இருந்து பழகுங்கள்.
கடைசி வரை உங்கள் வாழ்க்கையில் கரையேற்றும் ஓடமாய் இருப்பார்கள்.
இவர்கள் உங்களை
அங்கீகாரப் படுத்தும் அவதானி கள்.
உங்களை சிற்பமாய் செதுக்க நினைக்கும் சிற்பிகள்..!
இவர்களை நம்பினால் நீங்கள் சிற்பங்களாய் தோன்றலாம்.
கவர்ச்சிப் பேச்சில் மதி மயங்கினால் படிகற்களாய் மாறலாம்.
கவர்ச்சிகரமாக பேசி, உங்களை படுகுழியில் தள்ளும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
அவரிடத்து விலகிப் இருக்கப் பாருங்கள்.
விதைப்பவர்கள் என்றும் வித்தியாசமாய்
தெரிவார்கள்..!
ஆனால் இடையில்
அறுவடைக்கு வருபவர்கள் அட்ராக்ஸனாக வலம் வருவார்கள்.
ஆகவே மற்றவர்களிடம் பழகும் போதே,இவர் எப்பேர்ப்பட்ட நபர்
என்றுணர்ந்து பழகினால் வாழ்வில் எவ்வித பிரச்சனையும் எழாது.
அதே நேரத்தில் உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை,சடுதியில் சந்தேகித்து தூக்கி எறியாதீர்கள்.
அது கையில் கிடைத்த வைரக்கல்லை, கண்ணாடிக் கல் என எறிந்துவிட்டு
வருத்தமடைவதற்கு சமமாகும்.
ஆம்!வெண்ணெய்க்கும்,சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கையில்,
எளிதில் எது அசல்?
எது போலி? என்று
அடையாளம் காணமுடியாது.
ஒரு நாள் பழகினாலும்,ஒருவரின் குணங்களை தெரிந்து கொள்ளாதவர்களின் வாழ்க்கை,,திருவிழாவில் குழந்தையை தொலைத்து விட்டு
அழுவதற்கு ஒப்பாகும்.
ஆகவே அனைவரிடமும் அன்போடு பழகுவோம்!
நல்லவர்களை அடையாளம் கண்டு நலமுடன் வாழ்க்கை நடத்துவோம்.
அன்புடன் வாழ்த்தும் டாக்டர் கோவை கிருஷ்ணா.

No comments:

Post a Comment