Wednesday 21 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

படித்தேன்..... பகர்ந்தேன்.... சரியான நேரமிது.... அனைவருக்கும் பயனுள்ள தகவல்.....பகிருங்கள் உதவும் பலருக்கு....
*புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை மீண்டும் நட்டு 6 மாதத்தில் காய் பறிக்கலாம்*
*மேட்டுப்பாளையம் சக்தி அக்ரி கிளினிக் தலைமை அறிவியலர் ப.பாலசுப்பிரமணியன் அறிவுறை*
பேராவூரணி, அதிரை, மற்றும் பட்டுக்கோட்டை நாகையைச் சேர்ந்த தென்னை விவசாயிகளே,
தென்னை மரம் கீழே விழுந்து விட்டது என்று வருந்தும் விவசாயிகள் கவனத்திற்கு
எனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்கள் இவைகளை திரும்பவும் தூக்கி நட்டு குழியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 5 கிராம்/ லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கரைத்து ஊற்றி. பின்னர் நமது soil pro Actor coconut mix இட்டு திரும்பவும் உயிர் பெற வைத்து இருக்கிறோம்.
தென்னையில் ஒவ்வொரு மட்டை கணுவும் வேர் வளர கூடிய இடமாகும். எனவே விழுந்த மரங்களை திரும்பவும் நான் பரிந்துரைத்தவாறு நடுங்கள். நட்டு நான்கு திசைகளிலும் கம்பு நங்கூரமிட்டு கட்டினால் 6 மாதங்களுக்குள் வேர் வளர்ச்சி பெறும்.
சாறு வடிதல் நோயால் அழுகிய பகுதிக்கு மேல் துணி சுற்றி IBA ஹார்மோன் 500 பிபிஎம் தெளித்து புது வேர்களை உண்டாக்கி பின்பு அழுகிய பகுதிகளை வேட்டி வேர் வந்த பகுதியை தரையில் நடவும் கூட முடியும்
கட்டிடங்களுக்கு வேண்டி 40 தென்னை மற்றும் பாக்கு மரங்களை இடம் மாற்றி வெற்றிகரமாக வளர்த்துள்ளேன்.
தற்போது முழுவதும் வளர்ந்த தென்னை மரங்களை பறித்து அதை ஏற்றுமதி செய்து வளைகுடா நாடுகளில் நடவு செய்து இருக்கிறார்கள்
#Gaja #savedelta
மேலும் தகவலுக்கு
ப. பாலசுப்பிரமணியன்
தலைமை அறிவியலர்
சக்தி அக்ரி கிளினிக்
மேட்டுப்பாளையம்
+919442253021.
நன்றி கனகசபை ராமசாமி

No comments:

Post a Comment