Thursday 19 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியை அடையாளம் காண்போம்...
கட்டுரையாளர் திரு kgkrishnan.
நான் பிஜேபி கட்சி அல்ல . 1969 முதல் 1976 வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்மன்ற தலைவனாக பணியாற்றியவன். காமராஜின் உண்மை தொண்டன் சீடன் .எனது வேண்டுகோளை ஏற்று காமராஜ் என் வீட்டிற்கு வந்து _ உணவு அருந்தி சென்றார். இது எல்லோருக்கும் கிடைத்த பாக்கியமல்ல. தலைவர் கட்டளை ஏற்று போராட்டத்தில் பங்கேற்று இரண்டு முறை சிறை சென்றவன். எனது தலைமையில் 3500 காங்கிரஸ் தொண்டர்கள் சிறைவாசம் அனுபவித்தார்கள்.2000 ம் ஆண்டுக்குப் பின் அரசியலில் இருந்து தற்போதைய அரசியல் சூழல் எனக்கு ஏற்றதில்லை என்று நானாக ஒதுங்கினேன். இன்னும் மனதளவில் காங்கிரஸ்காரனே. ஆயின் அன்றும் இன்றும் நியாயமான செயல்களை யார் செய்திடினும் ஏற்புடை மனத்தவன்.
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் பிஜேபி முன்னிருத்திய பல
வாக்குறு திகளில் குடியுரிமை
சீர்திருத்தமும் ஒன்று..2019 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் அரசு அமைத்தது - தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் குடியுரிமை சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவமாகியது. மக்களவையில் 250 எதிர்கட்சி உறுப்பினர்கள் இருந்தும்
மசோதாவை எதிர்த்து வாக்களித்தவர்கள் 85 உறுப்பினர்களே.
ஒரு ஜனநாயக நாட்டில் முறைப்படி அமைந்த அரசாங்கம் முறைப்படி
சட்டமியற்றி நடைமுறைக்கு கொண்டு வருவதுதான் மரபு. இதை எதிர்த்து முழு பலத்தோடு வாக்களிக்காத எதிர்கட்சிகள்
ஜனநாயகமுறையில் போராடாமல் பேட்டை ரவுடிகள் போல் வீதியில் இறங்கி அராஜகம் செய்வது ஏற்புடையதா? ரயில்கள் பஸ்கள் போலீஸ் வேன்கள் தீயணைப்பு வண்டிகள் என தீவைத்து கொளுத்துவதும் மாணவர்கள் என்ற போர்வையில் கல்லூரிமுன் கலகம் செய்து கல் எறிவதும் ஏற்புடையது எனில் இந்த அரசு மட்டுமல்ல வேறு எந்த அரசு அமைந்தாலும் எப்படி நிர்வாகம் செய்ய இயலும்?
மத்திய அரசு இனியும் மெத்தனமாய் இருப்பின் அதுவும் கையாலாகாத அரசே. இயற்றிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய கடமை எவ்வகையிலும் அரசுக்கு உண்டு. இந்த போராட்டங்களை வளரவிட்டால் அரசு என்பதே ஒரு பொம்மைக்கு ஒப்பாகிவிடும்.
நீதிமன்றங்களும் அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்குமானால் நிகழும் அராஜகத்துக்கு அதுவும் உடந்தை என்றாகும்.
எதிர்கட்சிகள் தனது எதிர்ப்பை மக்களவையிலும் சட்டசபைகளிலும் முழுபலத்துடன்
காட்டுவதே உயர் அரசியல். தெருவில் இறங்கி அராஜகம் செய்வது ரவுடித்தனம்' ரவுடித்தனத்தை பலப்பிரயோகம் செய்து அடக்குவது தான் அரசாங்கத்துக்குரிய கடமை .
நன்றி ராஜப்பா தஞ்சை
இதில் தவறுமானால் திராணி அற்று போகுமானால் அரசை விட்டு பிஜேபி வெளியேறுவதுதான் உகந்தது.
ஊதும் சங்கை ஊதிவிட்டேன். விழுபவர் காதில் விழுந்தால் சரி. ,, /வந்தேமாதரம் /
கட்டுரையாளர் நமது முகநூல் நண்பர் திரு Kgkrishnan அவர்கள்.

No comments:

Post a Comment