Wednesday 18 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனம் அது இருக்கும் இடத்தில தான் இருக்கின்றது. அதை சொர்கமாகவோ அல்லது நரகமாகவோ ஆக்குவது நமது கையில்தான் இருக்கின்றது.”*
*🌜“The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven..
தங்கள் மகிழ்ச்சிக்கான காரணங்களை பரிமாறிக்கொள்ளும் உலகில் உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது என்ற கேள்வி நம்முன்னே எப்பொழுதும் கேள்விக்குறியாகவே நிற்கின்றது. மகிழ்ச்சியின் பரிமாணங்களை *அர்ச்சுனனுக்கு விளக்கும் கண்ணன்* பகவத் கீதையில் மகிழ்வின் மூன்று பரிமாணங்களை விளக்குகின்றார்.
*༺🌷༻*
*முதலாவதாக* புலன்களால் கிடைக்கும் மகிழ்ச்சி. உணவு, தூக்கம், சிற்றின்பம் போன்ற பல அனுபவங்களால் ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. ஐம்பொறிகளின் பசியினால் தூண்டப்பட்டு நாம் செய்யும் பல செயல்களினால் நமக்கு கிடைக்கின்றது. இது சிறிய நேரத்திற்கு மட்டும் கிடைக்கக் கூடியது. இந்த அனுபவங்களால் கிடைக்கும் உணர்வுகள் காலாவதியாகும் பொழுது இதன் தேவைகளும் தாக்கங்களும் மீண்டும் மீண்டும் நம்மை வாட்டிவதைக்கும். இது ஒரு தீராப் பசி.
*༺🌷༻*
*இரண்டாவதாக* பதவி, புகழ், மரியாதை, மற்றும் நம்முடைய தொழில் சாதனைகளால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. இது முந்தியத்தைக் காட்டிலும் சற்றே உயர்வானது. இருந்தாலும் இவைகளும் காலத்தால் கட்டுப்பட்டவை. தொடர்ந்து புகழும், பதவியும், மரியாதையும் கிடைக்கும்வரை மனம் ஒருவிதமான பெருமையையும் நிறைவையும் அனுபவித்துக்கொண்டிருக்கும். அவை நீங்கியவுடன் அவைகள் இல்லாத தாக்கத்தில் மனம் வேதனையில் துவண்டு விடும். அவை ஒரு மனிதனின் உண்மை நிலையை மறைத்து மனதில் ஒருவித மாயையை உருவாக்கிக்கொண்டிருக்கும்.
*༺🌷༻*
*மூன்றாவதாகக்* கிடைக்கின்ற மகிழ்ச்சி நம்முடையது என்று நாம் நினைக்கின்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், தனித்துவத்தை விட்டு விலகி இந்த உலகிற்கு நம்மை அர்பணித்துக் கொள்ளும்பொழுதும், சேவை மனப்பான்மையுடன் செயல் படும்பொழுதும், தியாக மனப்பான்மையுடன் செயல்படும்பொழுதும் கிடைக்கின்ற ஒரு நிறைவே ஆகும். இதுவே மகரயாழ் உண்மையான மகிழ்ச்சி.
*༺🌷༻*
*“மகிழ்ச்சியைத் தேடுவது தவறல்ல. ஆனால் அதை உன்னுள்ளே தேடவேண்டும். வெளியே தேடுவதால் பயனில்லை.”*

No comments:

Post a Comment