Wednesday 18 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லீகளுக்கு பாதிப்பு இல்லை..!! போராட்டத்தை நிறுத்துங்கள், கொந்தளிக்கும் முஸ்லீம் மத தலைவர்..!!
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட புதிய குடியுரிமை சட்டம் முஸ்லிம்களை எந்த வகையிலும் பாதிக்காது என டெல்லி ஜும்மா மசூதி தலைவர் ஷாஜி இமாம் செய்யது அகமது புகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தவே மத்திய அரசால், கொண்டுவரப்பட்டுள்ளது என இஸ்லாமிய அமைப்புகள் கருத்து கூறி வருகின்றன, ஆனால் இச்சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விளக்கம் தெரிவித்துள்ளனர் . ஆனாலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை . உச்சநீதிமன்றமும் இச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது . இந்நிலையில் புதிய குடியுரிமை சட்டம் குறித்தும் அதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்தும் இஸ்லாமிய இயக்க தலைவர் இமாம் கருத்து தெரிவித்துள்ளார், அதன் விவரம் :- போராடுவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை,மக்கள் போராடுவதை யாரும் தடுக்க முடியாது , அதேசமயம் அது வன்முறையற்ற சத்தியாகிரக போராட்டமாக இருக்கவேண்டும் . போராட்டமும் கட்டுக்குள் இருக்க வேண்டும் போராடுபவர்களும் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம் . அதாவது குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவிற்கும் வித்தியாசம் உள்ளது . குடியுரிமை திருத்த சட்டம் , சட்டம் ஆக்கப்பட்டுள்ளது . ஆனால் தேசிய குடிமக்கள் பதிவு சட்டம் ஆக்கப்படவில்லை . குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாகிஸ்தான் , ஆப்கனிஸ்தான், மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த முஸ்லிம்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியாது . அதேநேரத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment