Saturday 21 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இஸ்ரோவை உலகறிய செய்த ஐந்து நட்சத்திரங்கள்..
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அறிவியல் வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வருகின்றது. மேலும், இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம் அடைந்துள்ள வளர்ச்சியை கண்டு பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
1,ஏ.பி.ஜே. அப்துல்கலாம்:
முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை தொடங்கினார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார்.பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் (INCOSPAR) ஒரு அங்கமாகவும் அப்துல் கலாம் இருந்தார்.
1970க்கும் 190க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி.3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகளை வெற்றிகரமாக அமைத்தார்..
தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான பொக்ரான் அணுகுண்டு திட்டத்தின் கதாநாயகன்.
2,சிவதாணுப்பிள்ளை:
1947 ஜூலை 15 இல் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோவிலில் பிறந்தார் . இவர் டிவிடி உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவிலில் பள்ளியை முடித்திருக்கிறார். மின் பொறியியல் இளநிலை இருந்து தியாகராஜர் பொறியியல் கல்லூரியல் படித்தார்.1991ல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில், பின்னர் 1996ம் ஆண்டில் சாவித்ரிபாய் ஃபூலே புனே பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிஎச்டி படித்தார்.
சிவதாணுப்பிள்ளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவை பணியாற்றினார். மேலும், இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. மற்றும் பணியாற்றியுள்ளார் விக்ரம் சாராபாய் , சதீஷ் தவான் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகிய விண்வெளி மையத்திலும் பணியாற்றினார்.
சிவாதாணுப்பிள்ளை 1986 ல் டி.ஆர்.டி.ஓவில் இணைந்தார். மேலும் APG கலாம் தலைமையில் IGMDP இன் திட்ட இயக்குநராக இருந்தார் . எஸ்.எல்.வி. III வெற்றிகரமான வளர்ச்சிக்காக ஒரு முக்கிய குழு உறுப்பினராகவும், ISRO க்கான PSLV கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சிக்காகவும் அவரின் செயல்பாடு அமைந்தது. இஸ்ரோவில் பெரும் வளர்ச்சிக்கு இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
சிவதாணுப்பிள்ளை பிரமோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இந்தியா-ரஷ்யா கூட்டு உடன்படிக்கையில் தயாரிக்கப்பட்டாலும், அதிகவேக பிரமோஸ் ஏவுகணையினை உருவாக்கியவர்.
அப்துல் கலாம்,சிவ தாணுபிள்ளையை தொடர்ந்து, மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் என்ற இரண்டு தமிழர்களின் உழைப்பும் இஸ்ரோவின் பல வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
3,மயில்சாமி அண்ணாதுரை:
மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி கோதவாடியை சேர்ந்தவர். 1958ல் பிறந்தார். தமிழ் வழியில் படித்தாலும், இன்று உலகையே இந்தியாவை திரும்பி பார்க் வைத்துள்ளார். பொறியல் படிப்பை பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியிலும், முதுகலை படிப்பை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தார்.
அதிலும் மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் 1 மற்றும் 2 இரண்டிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 1 திட்டம் தொடங்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குனராக இருந்தவர்தான் மயில்சாமி அண்ணாதுரை. இவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் சந்திரயான் 1 உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2008ல் இவர் இந்த சாதனையை நிகழ்த்திய உடனே சந்திரயான் 2 திட்டம் இவரின் தலைமையில் கீழ் உருவாக்க தொடங்கப்பட்டது.
அதன்பின் அவரின் ஓய்வை தொடர்ந்து இஸ்ரோவின் தலைவராக தமிழரான கே. சிவன் நியமிக்கப்பட்டார்.
4, கே.சிவன்:
சிவனின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிற்றூர் ஆகும். தமிழ் வழியில்[2] பள்ளிக் கல்வியை கற்ற இவர் கணினியில் இளம் அறிவியல் பட்டமும் பின்னர் சென்னையில் உள்ள எம்.ஐ டி.யில் ஏரோநாட்டிகல் பொறியியலும் படித்தார்.
பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தார்.
அவர் நியமிக்கப்பட்டதும் சந்திரயான் 2வை உடனடியாக விண்ணில் செலுத்துவோம் என்று கூறினார். பணிகளை வேகமாக முடுக்கிவிட்டார்.
கே. சிவன் இஸ்ரோவுக்கு தலைவராக இருக்கின்றார். விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குநராக 2015ம் ஜூன்1 முதல் இருந்து வருகின்றார். பி.எஸ்.எல்.வி திட்டத்தில் முக்கிய பணியாற்றினார்.
கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் கே.சிவனின் பங்களிப்பு இருந்தது.
இந்த வருட ஜூலை மாதத்திலேயே சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது . எந்த தவறும் இல்லாமல் துல்லியமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.ஆனால் சில தொழில் நுட்ப கோளாறுகளால் நாம் எதிர்பார்த்த வெற்றியை அடைய தாமதமாகி விட்டது.
5,பி.வீரமுத்துவேல்:
இதை அடுத்து சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவை மீண்டும் ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டப் பணிகளில் ஈடுபடவிருக்கும் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, சந்திரயான்-3 திட்ட இயக்குநராக தமிழர் இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் விழுப்புரத்தைச் சோந்தவா்.
விழுப்புரம் வ.உ.சி. தெருவில் வீரமுத்துவின் தந்தை வசித்து வருகிறார்.
விழுப்புரத்திலுள்ள ரயில்வே பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்த வீரமுத்துவேல், இங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பை பயின்றாா். பின்னா், சென்னையில் பி.இ. பட்ட படிப்பும், திருச்சியில் எம்.இ. பட்ட மேற்படிப்பையும் நிறைவு செய்தாா். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவா், 2004-ஆம் ஆண்டில் இஸ்ரோவில் சோந்தாா்.
தற்போது, பெங்களூரில் வசித்து வரும் அவா், விழா நாள்களில் விழுப்புரத்துக்கு வருவாா். சென்னை ஐடிஐயில் பிஎச்.டி. படிப்பையும் நிறைவு செய்துள்ளாா்.
எந்த செயலையும் சிரத்தையுடன் செய்யும் வீரமுத்துவேல், சந்திரயான்-3 திட்டத்தையும் வெற்றிகரமாக விரைந்து முடிப்பாா் என்று நம்புவோம்..
இப்படி இஸ்ரோவின் பெரிய சாதனைகளுக்கு பின்பாக பல தமிழர்கள் இருந்தாலும் இந்த ஐந்து நடசத்திர தமிழர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். தலைமை பொறுப்பில் இருந்த இவர்கள் மட்டுமின்றி திருநெல்வேலி மஹேந்திரகிரியில் இஸ்ரோவிற்காக ஓயாமல் உழைக்கும் இன்னும் பல தமிழர்களும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஆவார்கள்.
ஆம் திருநெல்வேலி மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC) தற்போது அனுப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மகேந்திரகிரியில்தான் திரவ எரிபொருள் என்ஜின் அதாவது கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்கப்படுகிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்க கூடியது. இது இந்தியாவில் சுயமாக உருவாக்கப்பட்ட எஞ்சின் ஆகும். இதன் மூலம் தான் சந்திரயான் 2 செலுத்தப்பட்டது. இங்கு தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் தொடங்கி இஸ்ரோ வரை தற்போது தமிழர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பது நமக்கு பெருமை சேர்க்க கூடிய விஷயமாக இருப்பினும்?' நான் முதலில்இந்தியன்'அதன் பிறகே தமிழன்,நான் இஸ்ரோவில் இந்தியனாகவே பதவியில் சேர்ந்தேன் என்று இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் சிவன் அவர்கள் ஒரு பேட்டியின் போது கூறியதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment