Monday 23 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நிறைவான வாழ்வு''
.................................
எந்த செயல் உங்களுக்கு தூக்கத்தையையும் ஆரோக்கியமான மனநிலையைத் தருகிறதோ அதுவே நிறைவான வாழ்வு..
உங்களின் எது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதுவே உங்களுக்கு நிறைவான வாழ்வு..
வீடு, வாகனம், வசதி, பொருளாதாரம், பொருள்கள் மன நிறைவைப் பெற்றுத் தராது..
நிறைவு ஏன்பது ஒரு மன நிலை..அது ஒவ்வொருவருக்கும் வேறுப்பட்டுத் தான் இருக்கும்.
அவர் அவர்களே அவர்களுக்கு நிறைவை எது தருகிறது? என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
இருப்பதை விடடு இல்லாததை வாழ்க்கையில் தேடாதீர்கள். உங்களுக்கு கிடைத்ததை, இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள்.
உங்கள் வாழ்க்கையை நீங்களே ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.. பிறருடைய வாழ்க்கையை ஒப்பிடக் கூடாது
ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைகாரனைத் தான் ஒப்பிட்டுப் பொறாமைப் படுகிறான். கோடீசுவரனை ஒப்பிட்டு கொள்வது இல்லை..பொறாமை இல்லா வாழ்வே மகிழ்ச்சி தரும்..
அண்டை வீட்டாரோடு உறவினர்களோடு அன்புடன் பழகிப் பாருங்கள், மகழ்ச்சி எங்கே? என்று தெரியும்..
முகநூலில் பல ஆயிரம் கி.மீ அப்பால் உள்ள அந்நியருடன் நட்பாகப் பழகும் நீங்கள் உங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் உங்கள் அண்டை அயலாரோடு அன்புடன் பழகுவது இல்லை..
யாரே வெளி நாட்டவரோடு செல்பி எடுத்துக் கொள்ளும் நீங்கள் பக்கத்து வீட்டாரோடு எடுத்துக் கொள்வது இல்லை.. எடுத்துத் தான் பாருங்களேன் மகிழ்ச்சி தெரியும்.
மற்றவர்கள் செய்யும் தவறுகளை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காதீர்கள். மற்றவர்களின் சிறு தவறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
மற்றவர்களின் நிறையைக் காணுங்கள்.. குறையைக் காணாதீர்கள்.. மற்றவர்களின் நிலையில் நின்று எதனையும் அணுகுங்கள்.
உங்கள் செயல்பாடுகளை உங்கள் வாழ்க்கையோடு இணைந்தவர்களின் முக்கியத்துவம் உணர்ந்து நேசியுங்கள்..
ஆம்.,நண்பர்களே..
உங்களை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என எண்ணும் நீங்கள் அடுத்தவரின் சிறிய சிறப்பைப் பராட்டத் தவறாதீர்கள்..
உங்கள் வருமானத்தில் இருந்தே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...
பிறரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, தவறான வழியில் செல்லாதீர்கள்.. தவறாக எதையும் செய்யாதீர்கள்..
எவ்வளவு பலன் தருவதாகத் தோன்றினாலும் தவறான வழியை ஏற்காதீர்கள் .💐🙏🏻🌹

No comments:

Post a Comment