Monday 23 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

விஷப்பரீட்சை!!
..
.
என்ற சொல்லைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
பெரும் சக்ரவர்த்திகளாய்த் திகழ்ந்த அரசர்கள் உண்ணும் உணவை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய அக்காலத்தில் செய்யப்படுகிற பரீட்சை முறைகளுக்குத்தான் விஷப்பரீட்சை என்று பெயர்.
எப்படிச் செய்வார்கள்!!?
அரண்மனையில் எப்போதும் குரங்கு, கிளி, நாய்கள், கட்டெரும்புப் புற்று.... என வைத்திருப்பார்கள்.
சக்ரவர்த்தி உணவருந்த வரும்முன்னர்... அந்த உணவு வைத்துள்ள இடத்திற்கு குரங்கை அழைத்து வருவார்கள். உணவில் கடும் விஷம் இருந்தால்... அந்த குரங்கு அச்சத்தோடு கத்திக்கொண்டு.. அங்கும் இங்கும் தாவுவது கொண்டு முடிவு செய்வார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொல்லும் விஷமிருந்தால்!!?
பச்சைக்கிளிகளுக்கு அந்த அன்னத்தை சிறு தட்டில் வைத்து... கூண்டுக்குள் வைப்பார்கள்.
கூண்டுள் வைக்கப்பட்டுள்ள உணவை ஏறெடுத்தும் பாராமல்.. பதட்டத்துடன் இறக்கைகளை படபடபடவென்று அடித்துக்கொண்டால்... அந்த உணவில் வீர்யக் குறைவான விஷம் இருப்பதாக அறிவார்கள்.
மாந்த்ரீகம்... வைப்பு... சூனியம்... இன்னபிற கெடுதலோடு உணவு தயாரிக்கப்பட்டதாய் இருந்தால் அந்த அன்னத்தை எரும்புப் புற்று இருக்கும் இடத்தில் சிறிது போடுவார்கள்.
கட்டெரும்புகள் உண்ணாமல் இருந்தால்.... அது கெடுதலான உணவு... என்று அறிவார்கள்.
நாயை வைத்து எப்படி கண்டு பிடிப்பார்கள்...!!?
உணவை தயாரித்த பரிசாரகனிடத்தில் நாயை இட்டுச் செல்வார்கள். பரிசாரகன் பதட்டமின்றி காணப்பட்டாலும்... அவனது உள்ளுணர்வைக் கொண்டு நாய் குரைத்துக்கொண்டு... அவனை பிராண்டிக் கடிக்க ஆரம்பிக்கும்.!!
இப்படி பல வழிமுறைகளை நம் முன்னோர் விஷப்பரீட்சைக்காக கண்டறிந்து வைத்திருந்தார்கள்.
இது கலிகாலம்.
உணவில்தான் விஷம் என்றில்லை.
சொல்லில்.
செயலில்.
கண்ணசைவில்.
பேச்சில்.
சிரிப்பில்.
அணைப்பில்.
என்று பலவகைகளில் இருக்கின்றன.
இருந்திருக்கின்றன.!!
நன்றி ஆா். நாராயணன்
நன்றி ஆர். நாராயணன்

No comments:

Post a Comment