Saturday 28 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

விழிப்புணர்வுக்காக.....
ஒரு சின்ன அட்வைஸ். முக்கியமா பெண்களுக்கு. பேஸ்புக்க பொறுத்த வரைக்கும், எவ்ளோ நல்லா பழகினாலும் 'நம்பக தன்மை'ன்றது குறைவுதான். முடிஞ்ச வரைக்கும் புதுநட்புக்கள இணைக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிச்சு, யாரெல்லாம் அவங்க நட்புல இருக்காங்கனு பாருங்க. சின்னடவுட் வந்தாலும், திரும்ப உங்களுக்கு அவங்க நட்பு அழைப்பு குடுக்க முடியாதபடி... Mark as Spam குடுத்துடுங்க. முடிந்தவரை Share option - ல பதிவு போடாம, உங்க நட்பு பட்டியல்ல இல்லாதவங்க உங்க பதிவுகள பார்க்க முடியாதபடி, Only Friends option-ல போடுங்க. மிகமுக்கியமா புரோபைல் பிக்சர, (எல்லோரும் பார்க்கமுடியும்) நட்பு பட்டியல்ல இல்லாதவங்க, கமென்ட் பண்ண முடியாதபடி, Only Friends - ல வெச்சு, 'Profile picture guard' On பண்ணிடுங்க. (ஆனா 'Profile picture guard' னால, 100 % பாதுகாப்பெல்லாம் கிடையாது. Screen Shot கூட எடுக்கலாம்.)
அப்புறம்... "சகோதரி சாப்டீங்களா? ஐயையோ... மணி ஒன்னாச்சு இன்னும் சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆவுறது. காய்ச்சலாடா ? தலைவலியாடா ? ஏன் என்கிட்ட சொல்லல" இந்த அப்பரெண்டீஸ வெல்லாம்... அதிகபட்சம் மெசஞ்சரோட நிப்பாட்டுங்க. போன் நெம்பர குடுத்து, உங்களுக்கு நீங்களே முட்ட மந்திரிச்சு சூனியம் வெச்சுகாதீங்க. அதயும் மீறி சிலபேருக்கு நெம்பர் குடுக்கனும் ன்ற அவசியம் வந்தா... சிரமம் பார்க்காம ஒரு புதுநெம்பர வாங்கி, பேஸ்புக் நட்புகளுக்காக மட்டும் வெச்சுகங்க. அத... பேங்க், ஸ்மார்ட், ஆதார், பான்கார்ட், சொந்தகாரங்களுக்கு குடுக்கன்னு... அதி அவசியமான சமாச்சாரங்களுக்கு யூஸ் பண்ணாதீங்க. அது, ஒன் அன்ட் ஒன்லி பார் பேஸ்புக்கு மட்டுமே இருக்கனும். அப்படி இருந்தா... நாளைக்கு இந்த அப்ரெண்டீசுகளால பிரச்சன (கண்டிப்பா வரும்) வந்தா... சங்கடபடாம அந்த 'சிம்'ம ஒடச்சு வீசிட்டு புதுசிம் வாங்கி, 'ஹாய்... குட் மார்னிங் டூட்ஸ்' பதிவ போட்டுட்டு போயிட்டே இருக்கலாம்.
அப்புறம் புரோபைல் போட்டோ வெக்குற சமாச்சாரம். சிலபேர் தைரியமா வெக்கறீங்க. கொஞ்சம் விழிப்புணர்வு எட்டி பாத்திருக்குற இந்த காலத்துல, அதவெச்சு ஒன்னும் பண்ண முடியாதுன்றத விட, சில சில்றங்க எதயாவது பண்ண முயற்சி செய்யபோய்... அந்த சமாச்சாரம் புருஷனுக்கு தெரிஞ்சு, "இந்த மயிருக்கு தாண்டி அந்த எழவெல்லாம் வேண்டாம்னு தலதலையா அடிச்சுகிட்டேன். ஐஞ்சு நிமிஷத்துக்கு ஒருவாட்டி நீ போன நோண்டும் போதே தெரியும்டீ... நீ இப்படி மானத்த கெடுப்பேன்னு" ஆரம்பிச்சு, வீட்டு மோட்டுவலைல எரிமல புகைய ஆரம்பிச்சுடும். ஜாக்ரத.
"நீ வளர்க்கும் யானைய நம்பு. ஆனா சங்கிலிய கழட்டி விடாத" இதுதான் முகநூல் சூத்திரம். சில அரைவேக்காட்டு நல்லவங்க... புத்திசாலி மாதிரி நடிக்கமுடியும். ஆனா, ஒரு புத்திசாலி கிரிமினலினால், தன்னை ஒரு அப்பாவி முட்டாள்போல, நம்பவைக்க முடியும். இது ரயில் ஸ்நேகத்தில் பின்னப் படுகிற மாயவலை. இத நம்பி உங்க குடும்பத்துல குழப்பம் பண்ணிக்காதீங்க. உங்க மானம், மரியாதைக்கான பாதுகாப்புக்கு... நீங்களே பொறுப்பு. குடும்பம் நிரந்தரம். ஆனா... போலிமுகம் காட்டும் இந்த முகநூல்... !!! 😴😴😴
- Sakthi venkatesan.
படித்தது.(குறிப்பு;எல்லா ஆண்களும் அப்படி என்று சொல்ல வில்லை)
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment