Thursday 26 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍘வாழ்க்கையும் ஓர் பேருந்து பயணம் போல் தான். சிலருக்கு அப்பாவின் சொத்து போல் ரிசர்வ்ட் சீட் போல். சிலர் வெகு முயற்சியில் முன்னே வந்ததால் நல்ல இடம். சிலர் இடம் கிடைத்திடும் என்று காத்திருப்பர். சிலர் இடம் கிடைக்கும் முன்பே பாதியில் சென்றிடுவர். சிலருக்கு முடிவில் கூட எதுவும் கிடைப்பதில்லை.
🍘நீங்கள் அழகாகவும் வளமாகவும் இருக்க விரும்பினால் தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள். மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன்.
🍘மன உறுதி மிக்கவர்கள் தங்களுக்கு நடந்த அவமரியாதையையும் கஷ்டத்தையும் நினைத்து கலங்கி , அதையே நினைத்து நிகழ் காலத்தை இழக்க மாட்டார்கள். அதை பாடமாக ஏற்று வெற்றிக்கான பாதையைக் கண்டறிவார்கள்.
🍘தனிமையில் விடாது நட்பு. தன்னம்பிக்கை ஊட்டும் நட்பு. பாரபட்சம் பார்க்காது நட்பு. சேர்ந்தாலும், சந்தோசம் பிரிந்தாலும் வாழும் நட்பு. மனத்துயர் துடைக்கும் நட்பு. நாட்கள் சென்றாலும் பசுமை மாறாது நட்பு. உடன்பிறவா உறவு நட்பு.
🍘உங்களை நீங்களே மதிப்பது ஆணவம். பிறர் உங்களை மதிப்பது பெருமை!
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment