Monday 23 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அமெரிக்கரான எல்லீஸ் ஆர் டங்கன் 1936-ல் இயக்கிய சதிலீலாவதிதான் எம்ஜிஆர், பாலையா ஆகிய இருவரும் அறிமுகமான படம்..
பாகவதரின் அம்பிகாபதி, எம்எஸ் சுப்புலட்சுமி நடித்த சகுந்தலை, மீரா, மந்திரிகுமாரி உள்பட பல தெறி ஹிட்டுகளை கொடுத்தவர் இயக்குனர் டங்கன்.
அப்பேர்பட்ட டங்கனிடம் தமிழ் சினிமாவில் நடிப்பில் நெம்பர் ஒன் என யாரை குறிப்பிடுவீர்கள் எனக்கேட்டபோது அவர் சொன்னது டிஎஸ் பாலையாவைத்தான்.
அவ்வளவு ஏன் நடிகர் திலகம் சிவாஜியே, நெம்பர் ஒன் பாலையா நெம்பர் டூ எம்ஆர் ராதா என்று வரிசைப்படுத்தி பின்னர்தான் தாம் என்பார்.
அப்படிப்பட்ட பாலையா, ஆரம்பத்தில் வில்லனாக மிரட்டி கதாநாயகனாகி காமெடியனாக கலக்கி குணச்சித்திர கடலில் கலந்து திரையில் வெளுத்துவாங்கிய அற்புதக்கலைஞன்.
பர்மா ராணியில் உளவாளி, தூக்குத்தூக்கியில் இளவரசியின் வடநாட்டு கள்ளக்காதலன், உதார் தளபதி யாய் மதுரைவீரன், கொடூர வில்லனாய் புதுமைப்பித்தன் என பாலையாவின் பவர் ஃபுல் ஆக்டிங் லிஸ்ட் உண்மையிலேயே வியப்பானவை.
பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பணம் படைத்தவன் போன்ற படங்களில் பாலையாவின் நடிப்பாற்றலை சொல்ல தனி புத்தகம்தான் தேவை.
காதலிக்கநேரமில்லை, ஊட்டிவரை உறவு, பாமாவிஜயம் போன்ற படங்களை பாலையா இல்லாமல் நினைத்துப் பார்க்கவே முடியாது.
தில்லானா மோகனாம்பாள் படத்தில்,, தவில் வித்வா னாக, இன்னைக்கு ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு என்று குசும்புடன் சொல்லும் ரயில் பயண காட்சி...
58 வயதில் இதே நாளில்தான் 46 ஆண்டுகளுக்கு முன்பு டிஎஸ் பாலையா என்ற கலைஞன் காலத்தோடு கரைந்தான்....


No comments:

Post a Comment