Friday 20 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*பயனுள்ள பதிவு*
*மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி?*
😃 நம்பிக்கை என்பது வாழ்வில் மிக அவ ஒன்றாகும். வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும் மற்றவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். மற்றவர்கள் நம் மீது நம்பிக்கை கொண்டால்தான் இந்த சமுதாயத்தில் ஓர் உயர்ந்த பண்புள்ள மனிதராக நாம் விளங்க முடியும்.
*நம்பிக்கையை பெறுவதற்கான வழிகள் 
😃 மற்றவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும்.
😃 மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.
😃 நாமும் வெற்றி பெற வேண்டும், மற்றவர்களுக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற உணர்வோடு பிறருடன் பழகவும்.
😃 மற்றவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டும்.
😃 ஒளிவு மறைவின்றி திறந்த மனதோடு பிறரிடம் பழகவும்.
😃 தேவைக்கு மட்டுமே பிறரிடம் தொடர்பு கொள்ளாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
😃 சுய நலமின்றி பொது நலத்துடன் இருக்க வேண்டும்.
😃 மற்றவர்கள் உங்களை எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
😃 தன்னம்பிக்கையோடு பிறரை சந்திக்க வேண்டும்.
😃 உங்களுக்கு தெரிந்தவற்றை பற்றி யாராவது கேட்டால் எனக்கு இதுபற்றி தெரியாது என்று நேராக சொல்லிவிடக் கூடாது.
😃 பிறருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதை கண்டிப்பாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
😃 மற்றவர்களின் தேவையை அறிந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்.
😃 யாரிடம் பேசுகிறோம் என்பதை உணர்ந்து அவருக்கு ஏற்றபடி பேசினால் நல்லது.
😃 உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளைத் தவறாக பயன்படுத்தக் கூடாது.
😃 மற்றவர்களின் பெயர்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளவும்.
😃 எந்த ஒரு செயலையும் ஆர்வத்தோடு செய்ய வேண்டும்.
😃 மற்றவர் நம்மிடம் கூறும் ரகசியத்தை காப்பாற்ற வேண்டும்.
😃 எந்த சூழலிலும் பொய் பேசுவதை தவிர்த்துவிடவும்.
முதலில் மற்றவர்களையும் உங்களையும் நம்புங்கள்!...
வாழ்க்கை வசமாகும்...

No comments:

Post a Comment