Monday 23 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தனக்கு கிடைக்கும் பொருள், கல்வி, வேலை, தொழில், வாழ்க்கை எல்லாம் மிகச் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு தான் எல்லா ஏமாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
மனிதர்களின் உறவுமுறை என்பது எப்போதும் ஒரே மாதிரியாய் அமைவதில்லை. மகிழ்ச்சியாக, துக்கமாக, காயங்களாக, கண்ணீராக, பயமாக, சோர்வாக, உற்சாகமாக, நம்பிக்கையாக, சந்தேகமாக,வெறுப்பாக, கோபமாக, மோதலாக சில வேளைகளில் உயிரை உலுப்பும் உணர்வாகக் கூட இருக்கலாம்.
வாழ்க்கையில் இரண்டே வழிகள் தான், போர்க் களமா, அமைதித் தளமா. முடிவின் விளைவே வாழ்க்கை.
பணிந்து, தணிந்து, இணைந்து சென்றால் அது வாழ்க்கை. எரிந்து, புகைந்து, சிதைந்து சென்றால் அது தண்டனை. இதில் எதை நீ தேர்ந்து எடுக்கிறாயோ அதுவே அமையும்.
"உன் வாழ்க்கை உன் கையில்".
உற்சாகமாக இருக்கத் தொடங்குவது தான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் முயற்சி.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment