Monday 21 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நேற்று சிவகாசி பிக் சினிமாஸ் கணேஷ் தியேட்டருக்குப் போயிருந்தேன்.. ஒரு விடலைப் பையன் 500ரூ நோட்டைக் கொடுத்து 3 டிக்கெட் கேட்டான்.. டிக்கெட் கொடுப்பவர் செல்லாத நோட்டு என அதை வாங்க முடியாது எனச் சொல்லிவிட்டார்.. பையன் கடைசியில் கையில் இருந்த இரண்டு 100ரூ தாள்களைக் கொடுத்துவிட்டு அவன் நண்பர்களை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தான்..
அடுத்தது நான் சென்றேன்.. எனக்கும் நண்பனுக்குமாகச் சேர்த்து 120ரூ கொடுத்து இரண்டு டிக்கெட் கேட்டேன்.. ஏனென்றால் அந்தத் தியேட்டரில் சட்டப்படி அதிகபட்சமாக 60ரூ தான் டிக்கெட்டிற்கு வசூலிக்க வேண்டும்.. “200ரூவா சார்” என்றார் டிக்கெட் கொடுப்பவர்.. “அப்போ டிக்கெட்ல 200ரூன்னு பிரிண்ட் போட்டு, வரி செலுத்திய ஸ்டாம்ப் ஒட்டி டிக்கெட் குடுங்க” என்றேன்..
“அதெல்லாம் இங்க பழக்கம் இல்லைங்க.. இஷ்டம்னா வாங்கிக்கோங்க இல்லன்னா வழியவுடுங்க”
“என்னங்க இது? காசு செல்லாதுன்னு கவர்மெண்ட் சொன்ன அடுத்த செகண்ட்ல அந்தக் காச கையால கூட தொட மாட்றீங்க? அதே கவர்மெண்ட் 60ரூ.க்கு மேல டிக்கெட் விக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கு அத மட்டும் கேக்க மாட்றீங்களே? 100, 200னு இஷ்டத்துக்கு ஏத்திக்கிறீங்களே?”
டிக்கெட் கொடுப்பவர் மீண்டும் இஷ்டம்னா டிக்கெட் வாங்கிக்கோ என்றார்.. இன்னும் இரண்டு முறை கேட்டதும் தனக்கொன்றும் தெரியாது, தன் மேனேஜரிடம் வேண்டுமானால் பேசலாம், ஆனால் அவரும் ஊரில் இல்லை என்றார்..
இதற்குள் எனக்குப் பின் வரிசையில் நின்றவர்கள் மத்தியில் சிறு சலசலப்பு ‘என்ன வரிசை நகரவே மாட்டேங்குது?!’ என..
எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர் ‘ஏய் உங்க சண்டைய வேற எங்கேயாவது போய் வச்சிக்கோங்கப்பா.. எனக்கு டிக்கெட்டக் குடு இந்தா 100ரூவா” என்றார்.. அவருக்குத் துணையாக இன்னும் சிலர்.. டிக்கெட் கொடுப்பவரும் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை..
பிஸியாக அடுத்தடுத்த ஆட்களுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.. அதை டிக்கெட் என்பதை விட எவ்வளவு பணம் என்று கூட அச்சிடப்படாத ஒரு சாதாரண ரசீது என்று தான் சொல்ல வேண்டும்..
கூட்டம் அனைத்தும் 60ரூ, 45ரூ டிக்கெட்டை 100, 80ரூ.க்கு வாங்கிக்கொண்டு படம் பார்க்க முண்டியடித்தது.. நான் கேனையன் போல் நின்று கொண்டிருந்தேன்.. எங்கள் ஊர் தியேட்டர்களில் எனக்கு இது போல் மூக்கறுபடுவது இது எப்படியும் 10வது முறையாக இருக்கும்..
நம் நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் தியேட்டர், நகைக்கடை, மெடிக்கல் ஷாப், ஆஸ்பத்திரி, கல்லூரி, ஆம்னி பஸ், ஓட்டல்கள் என லட்சோப லட்சம் சம்பவங்கள் இது போல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்கிற சொரணையே இல்லாமல் மக்களும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. என்னைப் போல் எவனாவது கேள்வி கேட்டால் கேனையனாகத் தான் பார்க்கப்படுகிறார்கள்..
’நாங்கள் தானே ஏமாறுகிறோம் உனக்கென்ன?’ என்கிற தொனி கேள்விகள் வேறு.. டேய் நீங்க எமாறுங்கடா அது உங்க விதி.. உங்களால நானும் ஏன்டா ஏமாறணூம்?
நான் தியேட்டரில் செய்ததை மோடி இன்று ஒட்டு மொத்த தேசத்திற்கும் செய்கிறார்.. கையில் அதிகாரம் என்னும் மிகப்பெரிய பலத்துடன்..
என்னைக் கேனையனாக எண்ணிய கூட்டம் இன்று தன் தவறுகளை சரி செய்யும் முதல் முயற்சியாக வங்கி வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றன..
அநீதிகள் நடக்கும் போதெல்லாம் சொரணையே இல்லாமல் நவதுவாரங்களையும் மூடிக்கொள்ளும் கூட்டத்திற்கு, அதே அநீதியை ஒருவன் எதிர்த்து நிற்கும் போது ‘எனக்கு இங்க வலிக்குது, அங்க குடையது’ எனப் பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது..
முடிந்தால் இனியாவது பில் போட்டு, முறையான காசு கொடுத்து பொருட்களை வாங்குங்கள், இல்லாவிட்டால் ஆண்டுக்கொருமுறை இப்படி வங்கி வாசல்களில் காத்து நில்லுங்கள்..
நன்றி :
ஒரு
நண்பரின் ஆதங்கம்

No comments:

Post a Comment