Saturday 12 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

68 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ கிரிவலம்...!!!
-------------------------------------------------------------------------------------------------
வரும் 13ம் தேதி ஞாயிற்று கிழமை இரவு
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபட படுகிறது. பெளர்ணமி அன்று மலையை கிரிவலம் வந்தால் சித்தர்களின் ஆசி கிடைக்கும். அதிலும் இந்த மாத கிரிவலம் மிக அபூர்வ கிரிவலமாகும். 68 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிட ரீதியாக அதிகளவு பிரகாசமான நிலவை தரிசனம் செய்ய முடியும். இதனால் சந்திரனின் சக்தி மிக அதிகமாக இருக்கும்.
இந்த மாதம் வரும் 13ம் தேதி இரவு 10.08 மணிக்கு தொடங்கி திங்கள் கிழமை இரவு 7.08 மணி வரை கிரிவலம் வரும் நேரமாகும். ஞாயிற்று கிழமை இரவு பௌர்ணமி கிரிவலம் வரும் நாளாகும்.
பிக் மூன் - நாசா அறிவிப்பு.
***********"*****************
நிலா தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகே வரும் போது வழக்கமாக நாம் பார்ப்பதை விட மிக பெரியதாக தெரியும் . கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பவுர்ணமி யன்று பூமிக்கு அருகே நிலா வந்தது.
அதன் பிறகு தற்போது வரும் 14 ம் தேதி பவுர்ணமி நாளில் பூமிக்கு அருகே வருகிறது. 68 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கி வருகிறது. நிலா, பூமிக்கு அருகில் இருப்பதால் மிகப் பெரியதாகவும், அதிக ஒளி வீசும் வகையிலும் இருக்கும்.
நவம்பர் 13ம் தேதியன்று இரவில் தான் நிலா மிகப்பெரிய நிலாவாக தெரியும் . இனி 2034ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி தான், இதே போல் பூமிக்கு அருகே நிலா வரும்.
*குபேர கிரிவலம் *
~~~~~~~~~~~~~
முழு பாவி என்று எவரும் இந்த கலியுகத்தில் பிறப்பதில்லை;
முழு புண்ணிய ஆத்மா என்றும் எவரும் இங்கே பிறப்பதில்லை;
மானுடப்பிறப்பின் நோக்கமே மறுபிறவி இல்லாத முக்திதான்; இதை உணராமல் பல கோடி மனித ஆத்மாக்கள் பணத்தின் பின்பாகவும், புகழைத் தேடியும், அதிகாரத்தை நோக்கியும் ஓடி அரிய மானுட வாழ்க்கையை வீணடித்து விடுகின்றார்கள்.
சில பல ஆன்மீக ரகசியங்களை எப்போதாவது பொது நல நோக்கில் யாராவது புண்ணிய ஆத்மாக்கள் வெளியிடுவது வழக்கம்; அதில் ஒன்றுதான் குபேர கிரிவலம்!
***கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார்; வந்து, திருவண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார்; அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார்; இதுதான் அந்த தெய்வீக ரகசியம்;***
நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்திடம் ஒரு மணி நேரம் இருந்து நமது தேவைகளை பிராத்தனையாக வைப்போம்; அதன் பிறகு அங்கிருந்து நாமும் கிரிவலம் ஆரம்பிப்போம். குபேரலிங்கத்தில் ஆரம்பித்து,குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்; இப்படிச் செய்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது; பிறர் வீட்டிற்கும் செல்லக் கூடாது; நேராக நமதுவீட்டிற்குச் செல்ல வேண்டும்...
குபேரகிரிவலம் சென்றுவிட்டால், அடுத்த ஓராண்டுக்கு நமது வளர்ச்சி அபரிதமாக இருக்கும்; கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்; XXX *(ஒரு வருடம் வரை அசைவம்,மது இரண்டையும் தவிர்த்ததால் வளமான வாழ்க்கையைப் பெற்றார்கள் என்பதை இங்கே நினைவிற்கொள்ளவும்)* XXX
*இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.16 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்திருக்கின்றது. இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம் . *அதன் பிறகு,அங்கிருந்து கிரிவலம் புறப்பட்டு குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம்*
தொலைதூர ஊர்களில் வசிப்பவர்களும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முன்பாக இந்த செய்தியினை தெரிவிக்கின்றோம்...நன்றி
அஸ்வின்

No comments:

Post a Comment