Wednesday 30 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

போர் முடிந்ததும், தேரோட்டியான கிருஷ்ண பகவான் தன் கரங்களைப் பிடித்துத் தன்னைக் கீழே இறக்க வேண்டும் என்று அர்ஜுனன் கர்வம் கொண்டிருந்தான். ஆனால் கிருஷ்ணரின் கட்டளையோ வேறாக இருந்தது.
""போர் முடிந்து விட்டது. இனி என்ன தயக்கம்? அர்ஜுனா! தேரை விட்டு கீழே இறங்கு'' என்று கிருஷ்ணர் கட்டளையிட்டார்.
வெற்றிபெற்ற தன்னை தனக்குத் தேரோட் டிய கிருஷ்ண பரமாத்மாவே கைகளைப் பற்றிக் கீழே இறக்க வேண்டும் என்ற அர்ஜுனனின் கர்வத்தை அறிந்த இறைவன்,""அர்ஜுனா! உன் கர்வத்தை விலக்கு. நான் இட்ட கட்டளையை உடனடியாகச் செய்'' என்று அழுத்திச் சொல்ல, அர்ஜுனனும் கீழிறங்க, அடுத்த நொடியே தேர் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அர்ஜுனன் திகைத்து நின்றான்.
கிருஷ்ணன் புன்முறுவல் பூத்துச் சொல் கிறார்: ""அர்ஜுனா! பயம் வேண்டாம். வேண்டாத கர்வத்தை விட்டுவிடு. நான் உன்னைக் கீழே இறக்கிவிட வேண்டும் என்று நீ எண்ணினாய். வெற்றி வரும்பொழுதுதான் மனிதனுக்குப் பணிவு அவசியம் என்பதை முதலில் உணர்ந்து கொள். பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியர், துரியோதனன் போன்றோர் இட்ட அம்புக் கணைகள் நம் தேரில் குத்திட்டு நிற்கின்றன.
அந்த அம்புகள் அனைத்தும் மந்திர சக்திகள் நிறைந்தவை. நான் தேரை விட்டு இறங்கியவுடன் கொடியில் இருக்கும் அனுமனும் போய்விடுவான். அப்பொழுது மந்திர சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். பின் உன் கதி அதோகதிதான். அதனால்தான் உடனே தேரை விட்டு இறங்கச் சொன்னேன்.''
கிருஷ்ணரின் விளக்கத்தைக் கேட்ட அர்ஜுனன் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். கர்வம் கொள்பவனே மனிதன். நமது எண்ணங்களும், நமது எண்ணங்களை ஒட்டி உண்டாகும் கோப- தாபங்களும், கர்வம், அகங்காரம் போன்றவையே நமக்கு உண்டாகும் நோய்களுக்குக் காரணமாகும்.
நன்றி டாக்டர் துளசிராம்

No comments:

Post a Comment