Saturday 26 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"எனது வாழ்க்கையை மாற்றிய பணமதிப்பிறக்கம்"
"இணையதளத்தில் வைரலாகப் பரவும் மாண்பு மிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு காஷ்மீர் இஸ்லாமிய சகோதரர் எழுதிய கடிதம்"
அன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,
காஷ்மீர் போன்ற நித்திய கலவர பூமியில் பிரிவினைவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் நடக்கும் சண்டைகளுக்கு மத்தியில் ஒரு காஷ்மீரியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என இந்தியாவில் உள்ள மற்ற எந்தப் பகுதியில் வாழ்பவருக்கும் கணிக்க முடியாது,
நான் ஒரு சாதாரண காஷ்மீரி..- அப்சல் ரகுமான் , மேலும் நான் 2 சதவிகிதத்தை சேர்ந்த பிரிவினை வாதி அல்ல...
நான் ஒரு கணவன்
4 பிள்ளைகளுக்கு தகப்பன்..
வயதான பெற்றோர்களுக்கு மகன்.
மேலும் ஆம் நான் ஒரு பெருமை மிகு இந்தியன்.
ஸ்ரீநகரில் ஒரு ஜவுளி கடை நடத்தும் சாதாரண வியாபாரி ...
நான் எப்பொழுதும் நினைப்பது ஒரு நல்ல எதிர்காலத்தை என் பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுப்பதை தான் ....
பல பயமுறுத்தலுக்கு பிறகும் நான் என் மகனை போலீஸ் துறை தேர்வுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டேன் ..
எனது பெண் ஒருவர் 12 ஆம் வகுப்பு இந்த வருடம் எழுதுகிறார் ...
எனக்கு நன்றாகத் தெரியம் இந்த வருடம் அவளது எதிர்கால வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று...
ஆனால் கடந்த நான்கு மாதங்கள் மிகுந்த நிலையற்ற தன்மைகளாக அமைந்து விட்டது...
சொல்லப்போனால் அனைத்து நாட்களும் ஊரடங்கு உத்திரவு இங்கே.
என்னை போன்ற நடுத்தர வர்க்கம் வேலையில்லாமல் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது...
இருந்தாலும் இருந்த சிறு சேமிப்பால் வாழக்கையை நகர்த்த முடிந்தது...ஆனால் அது மட்டும் பிரச்சனை இல்லை...
என் மகள் இந்த 12 ஆம் வகுப்பு நடக்கும் முக்கியமான வருடத்தில் பல நாள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போனது.
என் மகனும் தினமும் எதிர் கொண்ட பிரச்சனையைப் பார்த்து கெட்டுப்போனான்..அவன் வயதில் உள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் வெட்டியாக இருந்து கொண்டு பாதுகாப்பு படைகள் மீது கல் எரிந்து கொண்டு இருந்தனர்..
பிரிவினைவாதிகள் அவர்களும் பணம் கொடுக்கின்றனர்..
வேலையில்லாதவன் என்ன செய்வான் , தன் பெற்றோர்களுக்கும் , பசியால் அழும் பிள்ளைகளுக்காகவும் எதையும் செய்வான்.
போலீஸ் வேலைக்கு செல்ல இருந்த செல்ல விரும்பிய என் மகனே கல்லெறி கூட்டத்துக்கு சென்றான்..
கையில் பெல்லட் துப்பாக்கியால் அடிப்பட்டு வந்த பிறகே எனக்கு தெரிய வந்தது..
பின்பு கலவரங்கள் குறையத் தொடங்கிய போது பள்ளிகளை எரிக்கத் தொடங்கினார்கள் அவர்கள்..
என் மகள் படித்த பள்ளியும் அவர்கள் எரித்த 29 பள்ளிகளில் அடக்கம்..
எங்கள் வாழ்க்கை முற்றாக முடங்கியது , எங்களால் தூங்க, உணவு உண்ண ஏன் இறக்கக் கூட அனுமதி இல்லாமல் போனது..
ஆனால் 8 நவம்பர் நாங்கள் காஷ்மீர் ரேடியோவில் ஒரு செய்தியைக் கேட்டோம்.
நீங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து இருப்பதாக..
இந்த முடிவு எங்களுக்கு இன்னமும் பயமுறுத்தியது..
எங்களிடம் மிகக் குறைவான அளவே பணம் இருந்தது அப்போது. அதுவும் வெறும் 500 ரூபாய் நோட்டுக்களாகவே.
அதை மாற்றக் கூட எங்களுக்கு வழி இல்லாமல் இருந்தது..
இந்தியா முழுக்க கறுப்புப் பணத்தைப் பற்றிய பேச்சாக இருக்க நாங்கள் எப்படி இனிமேல் பிழைக்கப் போகிறோம் என தவித்துக் கொண்டு இருந்தோம்..
உங்களின் இந்த முடிவு நாங்கள் இழந்த எங்கள் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் நிச்சயமாகவே அது மீட்டது.
இன்று காஷ்மீரில் எங்கும் கல்லெறிதல் இல்லை . பாதுகாப்பு படைகள் இருக்கிறார்கள் ஆனால் எங்கும் கல்லெறிபவர்களைக் காணோம்.
ஓரிரு நாட்களில் வாகனங்கள் நகரத் தொடங்கின எங்கள் வீதிகளில்..எங்கள் கடைகளைத் திறந்து விட்டோம். மார்க்கெட்டில் மக்கள் புழங்கத் தொடங்கி விட்டார்கள்.
நாங்கள் பல இடங்களில் மகிழ்ச்சி நிறைந்த முகங்களைக் காணுகிறோம்..
இந்தியாவில் வேறு இடங்களில் மக்கள் வங்கிகளின் வாசல்களில் வரிசையில் நிற்பது வலி மிகுந்ததாக உள்ளது என உணருகிறார்கள்.. ஆனால் நாங்கள் வரிசைகளில் நிற்பதற்கு உவப்பாக உணருகிறோம்..மக்களோடு கலந்து மகிச்சியோடு உரையாட வாய்ப்பாகக் கருதுகிறோம்...
நாங்கள் மகளின் தேர்வைப் பற்றி கவலை கொண்டோம்..அவள் தேர்வு எழுத சென்றுள்ளாள். பல மாணவர்கள் தேர்வு எழுத மகிழ்ச்சியோடு வந்தார்கள்..இந்த சில நாட்களில் 95 சதவிகித வருகை பதிவாகியதாம் ..
இப்படி ஒரு நேர்மறையான நிகழ்வுகள் நடந்ததால் , நாங்கள் குழுவாக உட்கார்ந்து பேசினோம்.. ஏன் சரியானது? எப்படி சரியானது? பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். பிரிவினைவாதிகளிடம் 500 /1000 நோட்டுக்கள் மட்டுமே உள்ளன. இப்போது அதை யாரும் வாங்க மறுத்து விட்டார்கள்.
மற்ற இந்தியர்கள் இதை வரவேற்கிறார்களா என எனக்குத் தெரியாது , நாங்கள் காஷ்மீர் மக்கள் இந்த மதிப்பிறக்கத்தை மிக மகிச்சியோடு வரவேற்கிறோம்...
உங்கள்
அப்சல் ரகுமான்.
www.indiarising.com இல் வந்துள்ள ஒரு கட்டுரையின் தமிழாக்கம் இது..
நன்றி நடராஜன்

No comments:

Post a Comment