Monday 14 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஓஷோ ஜோக்ஸ்
படகைப் பிடிக்க எண்ணி முல்லா நஸ்ருதீன் ஓடினார்.
அவர் வெளியூர் பயணம் புறப்பட்டிருந்தார்.
எனவே படகைத் தவறவிட முடியாத நிலையில் இருந்தார்.
அவர் படகுத்துறையை அடைந்தபோது படகு நகர்ந்து கொண்டிருந்தது.
கரையிலிருந்து எட்டிக்குதித்துப் படகில் காலூன்றினார்.
பேலன்ஸ் தவறிவிட, படகினுள் குப்புற விழுந்துவிட்டார்.
முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.ஆடை கிழிந்து போயிற்று.ஆனாலும் மகிழ்ச்சியாக எழுந்தார்.
வியப்போடு அவரைப் பார்த்த பயணிகளிடம்,
"நான் தாமதமாக வந்தாலும் படகைப் பிடித்துவிட்டேன்" என்று கூறினார்.
"உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை முல்லா.!
இந்தப்படகு புறப்பட்டுப் போகவில்லை.கரையை நோக்கி அல்லவா வந்துகொண்டிருக்கிறது?
அதற்குள் என்ன அவசரம்?" என்றனர் படகில் இருந்தவர்கள்.
எங்கோ சென்று சேர நினைத்து,
நீங்கள் வாழ்நாள் எல்லாம் ஓடினீர்கள்.
மரணம் சம்பவிக்கும் சமயத்தில் உங்களது ஓட்டம் வீண் என்று தெரியவரும்.
புறப்பட்டுச் செல்லும் படகிற்குப் பதிலாக,
உங்கள் இருப்பிடம் நோக்கி திரும்பவரும்
படகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும்.
--- ஓஷோ ---
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment