Saturday 26 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மோடி தற்போது புலி மீது தைரியமாக சவாரி செய்து கொண்டிருக்கிறார் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தற்போது புலி மீது தைரியமாக சவாரி செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன. எனினும் மோடியை தொடர்ந்து விமர்சித்து வரும் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த விவகாரத்தில் முழுஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சிக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசியதாவது:
கறுப்புப் பணத்தை ஒழிக்க பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். தற்போது அவர் புலி மீது தைரியமாக சவாரி செய்து கொண்டிருக் கிறார். இதனால் கூட்டணி கட்சிகளைக்கூட அவர் இழந் துள்ளார். இதற்காக அவரைப் பாராட்டுகிறேன். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன். இத்தோடு நிறுத்திவிடக்கூடாது. அடுத்ததாக பினாமி சொத்துகள் தொடர்பாகவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment