Wednesday 23 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அறிந்து கொள்வோம்
எதற்காக இந்த பொருளாதார புரட்சி ?
"இனி காகித பணதிற்கு வேலையில்லை - எல்லாமே UPI தான்"
UPI (Unified Payments Interface) என்றால் என்ன ?
பணம் அற்ற பொருளாதாரத்தின் முக்கிய பங்காக இருக்கப்போவது யுனிபைட் பேமெண்ட் இண்டர்பேஸ் .
ரிசர்வ் பேங்க் இன்போசிஸ் நந்தன் நிகலானி துணையோடு வடிவமைத்த சிஸ்டம், வங்கிகளுக்கிடையே பணம் பறிமாற்றம் செய்வதைப்போல தனி மனிதர் vs தனி மனிதர் அல்லது தனிமனிதர் vs நிறுவனம் இடையே பணப்பறிமாற்றம் செய்யும் அமைப்பு .
இப்போதைக்கு 21 வங்கிகள் தயாராகியுள்ளன ,வருட இறுதிக்குள் எல்லா வங்கிகளும் தயாராகிவிடும் .
பெட்டிக்கடைக்கு போகிறீர்கள் ,50 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை எவ்வளவு வேண்டுமானாலும் தரமுடியும் .எப்படி ?
முதலில் UPI பெயரை உங்கள் வங்கி மொபைல் ஆப் வழியாக பெறவேண்டும் ,அது உங்கள் பெயர்+எண் ,உங்கள் மொபைல் எண் ,ஆதார் எண் என எதுவாக வேண்டுமானாலும் யுனீக்காக இருக்கலாம் . ,தேர்தெடுத்துக்கொண்டு பாஸ்வேர்ட் செட் செய்துகொள்க .
ஒரு UPI ஐடியில் உங்களது எல்லா வங்கிகளின் கணக்கையும் இணைத்துக்கொள்ளலாம் .
மொபைல் ஆப்பை திறக்கிறீர்கள் , பாஸ்வேட் தருகிறீர்கள் , பால்காரர் ,பூக்காரம்மா,கறிக்கடைக்கரரின் UPI எண்ணை கேட்கிறீர்கள் , அவரது எண் அல்லது பெயரை சொல்கிறார் , தெரியவில்லை எனில் அவரது ஆப்பில் உள்ள பார்கோடை உங்கள் ஆப் வழியாக படித்து ஏற்றிக்கொள்ளலாம் .
அப்புறம் எவ்வளவு ,எதற்காக என டைப் செய்கிறீர்கள் ,டிரான்ஸ்பர் செய்கிறீர்கள் ,OTP வரும் ,அதை தந்தால் பணம் சேர்ந்துவிடும் , அவர் பெற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளிக்க வேண்டும் .அவருக்கும் உடனே கன்பர்மேசன் வரும் .
உங்களுக்கு யாராவது தந்தால் நீங்கள் ஏற்றுக்கொண்டால் உடனே வந்து உங்கள் வங்கிக்கணக்குக்கு போய்விடும் .
சரி ,இதற்கு எவ்வளவு காசு பிடுங்குவார்கள் ?
0%
அதாவது எந்த சார்ஜுமே இல்லை .முழுக்க இலவசம் ,அதாவது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அனுப்ப ,பெற எந்த செலவுமே இல்லை ,ஐம்பது ஐம்பதாக ஒரு லட்சம் அனுப்பி பெற்றாலும் கூட .
பணம் வங்கிக்கணக்கில் இருந்து வங்கிக்கணக்குக்கு மட்டுமே மாறும் ,பணமாக வேண்டுமானால் ATM ல் எடுக்கலாம் .
நடக்குமா ?
இநதியாவில் இப்போதைக்கு இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 35 கோடி , வாட்ஸப் உபயோகிக்க என்ன அறிவு வேண்டுமோ அது இருந்தால் போதும் .2g வேகம் போதும் ,அதிகபட்சம் 10 நொடிகள் போதும் .
எங்காவது நடக்கிறதா ?
கிட்டத்தட்ட இந்தியாவே போன்ற சீனாவில் 90% சிறிய விற்பனைகள் (பழம் ,காய்கறி ,டிக்கெட் ,ரீசார்ஜ் ,மளிகை,டாக்ஸி ) வீசாட் ஆப் வழியாகவே நடக்க்கின்றன .
என்ன குறைகள் ?
மொழி
ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால் தவறுகள் நடக்கும் ,உபயோகிக்க முடியாது , வங்கிக்கணக்கு இல்லாவிட்டால் உபயோகம் இல்லை . பணமாக ATM ல் எடுத்தால் சார்ஜ் வரும் .மொபைல் தொலைந்தால் மட்டும் பணமின்றி தவிக்க நேரும் .
என்ன நன்மை ?
பில்லில்லா பண விற்பனை குறையும் ,டாக்ஸபில் சேல்ஸ் கூடும் , பயமின்றி எங்கும் போகலாம் ,யாரும் இந்த ஆப்பில் இருந்து திருட முடியாது , தவறு நேர்ந்தால் நீங்கள் அல்ல உங்கள் வங்கியே பொறுப்பு .
தேசம் முன்னேறும்

No comments:

Post a Comment