Monday 22 July 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

21-7-2019--நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுநாள் சிறப்பு பதிவு
-
நடிகர் திலகம் பற்றி நான் சேகரித்த தகவல்கள்--நான் கைப்பட டைப் பண்ணியது. காப்பி பேஸ்ட் இல்லை. பொறுமையாக படியுங்கள். நன்றி
-
இன்று பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழும் நடிகர் திலகம் அவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் கணேசன். சிவாஜி இந்து கண்ட சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் மராட்டிய மன்னன் சிவாஜி வேடத்தில் நடித்த இவரது நடிப்புத் திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார் அவர்கள் இவரைப் புகழ்ந்து நடிகர் திலகம் அவர்காலி சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து இன்றுவரை சிவாஜி கணேசன் என்றே அழைக்கப்படுகிறார்.
-
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ, உ சி, பகத்சிங்,திருப்பூர் குமரன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்த ஒரே நடிகர் சிவாஜி அவர்கள் மட்டுமே.
.அதே போல் சிவபெருமான், நாரதர்,கிருஷ்ணர் முருகர் சிவனடியார்கள் என தெய்வங்களின் உருவங்களுக்கு முகம் கொடுத்தவர் இவரே.
-
தமிழ் சினிமா உலகில் முதல் முதலாக கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜி அவர்களுக்குத்தான்.1957 ஆம் ஆண்டு வெளிவந்த 'வணங்காமுடி' என்ற திரைப்படத்திற்கு பிரம்மாண்டமான கட்--அவுட் வைக்கப்பட்டது.
-
சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா"நாடகத்தை பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசாகும். பின்னாளில் அது திரைப்படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைக் கண்டது..
-
நடிகர் திலகம் நடித்த படங்களில் பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம் " 'கப்பலோட்டிய தமிழன்"
-
பாடல்களே இல்லாத முதல் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த 'அந்த நாள்' திரைப்படம் ஆகும்
-
தேவர் ஃபிலிம்ஸ் சிவாஜி அவர்களை வைத்து தயாரித்த ஒரே படம்" தர்மராஜா"
அதே போல் எம். ஜி ஆர். படங்களை தயாரித்த சத்யா ஃபிலிம்ஸ் சிவாஜி அவர்களை வைத்து தயாரித்த ஒரே படம்--"புதிய வானம்"
-
தமிழில் தயாரிக்கப்பட்ட முழுநீள வண்ண கலர் படம் நடிகர் திலகம் நடித்த "வீர பாண்டிய கட்டபொம்மன்" வண்ணப்படமாகும்.
-
சிவாஜி அவர்கள் இரு வேடங்களில் நடித்த திரைபடங்கள்
உத்தமபுத்திரன்
எங்க ஊவார் ராஜா
சிவகாமியின் செல்வன்
கௌரவம்
என் மகன்
மனிதனும் தெய்வமாகலாம்
சந்திப்பு
ரத்தபாசம்
பாட்டும் பரதமும்
என்னைப் போல் ஒருவன்
புண்ணிய பூமி
என்னைப்போல் ஒருவன்
எமனுக்கு எமன்
விஸ்வரூபம்
வெள்ளை ரோஜா
-
மூன்று வேடங்களில் நடித்த படங்கள்
பலே பாண்டியா
தேவ மகன்
திரிசூலம்
-
ஒன்பது வேடங்களில் நடித்த படம்
'நவராத்திரி"
-
நடித்த முதல் படம்--பராசக்தி
கடைசிப்படம்--பூப்பறிக்க வருகிறோம்.
-
எம். ஜி. ஆர் அவர்களோடு நடித்த ஒரே படம்--கூண்டுக் கிளி
-
சிவாஜி அவர்கள் இயக்கிய ஒரே படம்--ரத்தபாசம்(இயக்குநர் பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால் மீதி படத்தை சிவாஜி இயக்கினார்)
-
சிவாஜி அவர்களுடன் இணைந்து இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே படம்
:" பைலட் பிரேம்நாத்"
-
நடிகர் திலகத்தை வைத்து அதிகப் படங்கள் தயாரித்தவர் நடிகர் பாலாஜி மட்டுமே( 17 படங்கள்)
-
சிவாஜியுடன் ஜோடியாக நடித்த முதல் நடிகை--பண்டரி பாய்
சுமார் 55 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார்
இதில் கே. ஆர் விஜயா 40 படங்களிலும்,
பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.
-
அண்ணாதுரை, கருணாநிதி, எம். ஜி. ஆர் , என். டி ஆர், ஜெயலலிதா என ஐந்து முதல் அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் முதல் ட்ரைலர்'
உருவானது சிவாஜி நடித்த 'திரும்பிப் பார் 'திரைப்படத்திற்கு. இந்த படத்தை தயாரித்தவர்கள் மாடர்ன் திியேட்டர்ஸ் நிறுவனம்
-
சிவாஜி அவர்களுக்கு கடைசி வரை நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு.
அதுதான் தனக்கு சிவாஜி பட்டத்தைக் கொடுத்த பெரியார் அவர்கள் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது.
-
இத்தகைய நடிப்பு சக்கரவர்த்தி மண்ணை விட்டு மறைந்தாலும் கோடான கோடி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.
வாழ்க அவரது புகழ்
நன்றி மீனாள் காந்தி

No comments:

Post a Comment