Saturday 20 July 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வள்ளியம்மை அகிலா பதிவு..
காஞ்சிபுரம் அத்தி வரதர் ஐ அனைவருமே தரிசிக்க வேண்டும் நண்பர்களே...!
40 வருடத்திற்கு தண்ணீரிலே இருந்து விட்டு ஒரு முறை மட்டுமே தண்ணீரிலிருந்து
வெளிவந்து
நமக்கு காட்சி அளிக்கிறாங்க...
மறக்காமல் எப்படி பட்ட வேலைகளிருந்தாலும்
சூழலில் இருந்தாலும்
அத்திவரதரை தரிசனம் செய்துடுங்க.
அதிக மின்னணு குளிர்சாதனங்கள் பொருத்தப்பட்ட அறையில்
அதிக LED and Focus Lights💡
மற்றும்
அதிக அளவில் மணமுள்ள பூக்கள் அலங்காரத்துடனும்
துளசி பச்சை கற்பூர மணத்துடனும்
வெகுநேர காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழலில் கூட,
அத்தி வரதர் ஐ பார்த்த அந்த ஒரு நொடியில்
உள்ளமே உற்சாகமடைந்து
அளவில்லா பேரருளைப் பெற்றது போலவும் நமது
உலகத்து மக்களேயே அத்தி வரதர் நேரிலே ஆசீர்வாதம் செய்வது போலவும்
மனப்பூரணமாக ஆசீ பெற்றது போல உணர்ந்தேன்.
நம் அனைவருக்கும் பிரார்த்தனைகளும் செய்து மனம் மகிழ்ந்தேன்.
அத்தி வரதர் கோயில் செல்ல,
விரைவில் தரிசனம் பெற எனக்கு தெரிந்த
சில சிறு குறிப்புகள்
1. VIP Pass நீங்கள் வைத்திருந்தால் 5நிமிடத்திலிருந்து-30 நிமிடத்திற்குள் உங்கள் குடும்பத்தினருடன் தரிசிக்க இயலும்
2.Donar passவைத்திருந்தால்
ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே தரிசிக்க இயலும்
3. வயது முதிர்ந்தவர்கள் என்றால் ஆதார் அட்டை அவசியம் தேவை.
வயதானவங்க உடன் துணைக்கு ஒருவரை அழைத்து செல்லலாம். (காலுறை அணிந்து செல்லுங்கள்) சாக்ஸ்
4. முடியாதவங்க என்றால் மருத்துவரிடம் கூறி அவங்க அனுமதியுடன் வீல் சேரில் சுவாமி தரிசனம் செய்ய செல்லலாம்.
உடன் ஒருவரை அழைத்து செல்லலாம்.
5. மாதமாக இருப்பவர்கள்
சிறு குழந்தைகள் வைத்து இருக்கும் பெற்றோர்களும்
தனி அனுமதி பெற்று அவங்களுக்கு என உள்ள வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
6. முடிந்தவரை ஆடம்பர அணிகலன்கள், விலை உயர்ந்த பொருட்கள், மொபைல் மற்றும் பணம் ஆகியவற்றை பத்திரமாக வைத்துக் கோங்க.
7.சாதாரண மக்கள்
முடிந்தவரை
விடியற்காலை அல்லது
மாலையில் தரிசனம் செய்வது
தான் மிகவும் உத்தமம்.
காலை 8 மணிக்கு மேல் வெளியூர் மக்கள் மிகவும் அதிகமாக சுவாமியை தரிசனம் செய்ய வருவதால்
அளவுக்கு மீறி கூட்டம் வருகிறது.
தண்ணீர், கல்கண்டு, குளுக்கோஸ், பிஸ்கெட் போன்றவற்றை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.
லோக்கல் பேருந்துகளில் கோயில் செல்ல 10 ரூபாய் மட்டுமே.
கோயில்அருகேபேருந்துக்களில் மட்டுமே இறக்கிவிடுவாங்க.
ஷேர் ஆட்டோக்களில் செல்ல ஒரு ஷேர் 10 ரூபாய் தான் என்றாலும் கூட நமக்கு தெரியாத ஊர் என்பதால் ஆட்டோக்காரங்க கோபுர வாயிலில் நம்மை இறக்கி ல
விடாமல் வெகு தூரத்தில் இறக்கிவிட்டுறாங்க...
காஞ்சிபுரம் ல ஒரு பேருந்து நிலையம் மட்டுமே சாதாரண நாட்களில் இருக்கும்.
இப்ப திருவிழா என்பதால் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன.
லோக்கல் செல்ல பழைய பேருந்து நிலையமும்
சென்னை வேலூர் திருப்பதி செல்ல புதிய பேருந்து நிலையமும்
ஒரிக்கை ல கும்பகோணம் திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்ல பேருந்துக்ளும் உள்ளன.
அளவுக்கு மீறிய மக்கள் வருவதால்
போலீஸ்காரங்க மற்றும்
வாலன்டீயர்ஸ் ல
Control செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
வெளியூர் கோயில்களிலிருந்து சிறப்பு அனுமதி கடிதங்கள் கொண்டு வருபவர்களையுமே இங்கு அனுமதிக்க மாட்டார்கள். இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் சிறப்பு கடிதங்களை காட்டி அவங்க பாஸ் தந்தால் மட்டுமே கோயிலில் அனுமதிக்கிறாங்க. அல்லது கலெக்டர் அலுவலகத்தில் சென்று இந்த கடிதத்திற்கு என சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல முடியும்
VIP, 500 ரூபாய் க்கு online booking tickets உள்ளவங்க மற்றும் Donar அட்டைல வைத்திருப்பவங்க மட்டுமே அத்தி வரதர் சுவாமி இருக்கும் அறையுனுள் ஐந்து நிமிடங்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறாங்க.
தர்ம தரிசனம்
முதியோர்கள்
உடல்நிலை சரியில்லாமல் இருப்பவங்க
அனைவருமே
அத்தி வரதர் இருக்கும் அறைக்கு வெளியே உள்ளவாசலிலிருந்தே
அத்தி வரதர் ஐ ஒரு நொடி இல்லை இல்லை அரை நொடியிலே காண அனுமதிக்கப்படுறாங்க.
அடுத்த அத்தி வரதர் ஐயும் நான் காண வேண்டும் என மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்
உங்கள் தோழி வள்ளியம்மை என்கிற அகிலாண்டேஸ்வரி.
வாழ்க வளமுடன் நண்பர்களே !!!

No comments:

Post a Comment