Monday 29 July 2019

எம்.எல்.ஏ. என்றால் இப்படி இருக்க வேண்டும்?

எம்.எல்.ஏ. என்றால் இப்படி இருக்க வேண்டும்?
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்
இந்நிலையில், அசாமின் அம்தய் தொகுதியில் இருந்து தேர்வான பா.ஜ., எம்.எல்.ஏ., மிரினால் சாய்கியா, தனது சொந்த செலவில் உணவு சமைத்து விநியோகித்து வருகிறார். இதுவரை அவர் 15 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து விநியோகம் செய்துள்ளார். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அவரே உணவு தயாரிக்கிறார். இதற்காக, வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதில், உணவு சமைப்பதற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்துள்ளார். மேலும், இந்த வாகனம் மூலம் நடமாடும் மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக மிரினால் சாய்கியா கூறுகையில், வெள்ளத்தால், உதவ வேண்டும் என்பதற்காக சொந்தமாக வாகனம் வாங்கினேன். முதல்நாள் சொந்த செலவில் உணவு சமைத்து வநியோகம் செய்தேன். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த பலர், தாமாக முன்வந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது, தேவைக்கும் அதிகமாக பணம் சேர்ந்துள்ளது. இதனால், நன்கொடையாளர்கள் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என கூறிவிட்டேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதே எனது நோக்கம். அவர்களுக்கு, அரிசியும், பருப்பும் இலவசமாக வழங்க முடியும். ஆனால், அவர்கள் சமைப்பதில் சிக்கல் ஏற்படும். எனது தொகுதியான கும்தய் மற்றும் அருகில் உள்ள போகாகாட் தொகுதியில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு உணவு விநியோகம் செய்துள்ளேன்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய்களால் பாதிக்கப்படும். இதனால், மொபைல் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டேன். இதற்காக அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உதவினர். அரசே, மருந்துகளை விநியோகம் செய்தது என்றார்.
மேலும், மிரினால் சாய்கியா, விவசாயிகளுக்கு, இலவசமாக நெல் நாற்றுகளை வழங்கி வருகிறார். இதுவரை 800 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். பொது மக்களுக்கு உதவுவதே எனது நோக்கம் எனக்கூறும் அவர், எம்எல்ஏ.,வாக பதவியேற்பதற்கு முன்னரும் இவ்வாறு உதவி செய்துள்ளேன் என்கிறார். இவரின் இந்த பணியை தொகுதி மக்கள் ஏராளமானோர் பாராட்டியும்,இவை எல்லாம் உண்மை எனவும் கூறுகின்றனர்.
குறிப்பு;இப்படி உதவக் கூடிய ஒரு எம்.எல்.ஏ.தமிழகத்தில் உண்டா?எம்.எல்.ஏ.என்று எதற்காக தேர்வாகி உள்ளோம் என்றுதான் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியுமா?போதுமான நிதி சேர்ந்து விட்டது இனி பணம் அனுப்பாதீர்கள் என அறிக்கை விடும் ஒரு எம்.எல்.ஏ வை தமிழக்தில் கண்டது உண்டா?இத்தனை கோடி தமிழர்களில் தொகுதிக்கு ஒரு தமிழன் கூட நல்லவன் இல்லையா?அல்லது நல்லவனை தேர்ந்து எடுக்கும் தகுதி தமிழர்களுக்கு இல்லையா?




No comments:

Post a Comment