Monday 22 July 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)












புதிய வரலாறு - பாராட்டுக்கள்...
ஒரே மாதத்தில் 5-வது தங்கம்: இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ்.
செக் குடியரசு நாட்டில் உள்ள பராக் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் இந்திய சார்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் வீராங்கனை ஹிமா தாஸ் பங்கேற்றார். இதில் நேற்று நடந்த மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில், தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸ் வென்றார்.
கடந்த 2-ம் தேதியில் இருந்து ஹிமா தாஸ் ஐரோப்பா கண்டத்தில் வெல்லும் 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2-ம் தேதி போலந்தில் நடந்த போஸ்னன் அத்தலெட்டிக் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 200 மீ ஓட்டத்தில்,முதல் தங்கம் வென்றார்.
அடுத்ததாக, 7-ம் தேதி போலந்தில் குட்னோ தடகளப் போட்டியல் 200 மீ ஓட்டத்தில் 2-வது தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸ் கைப்பற்றினார்.
அதன்பின், செக்குடியரசில் கிளாட்னோ அத்தெலடிக் மீட் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கமும், செக் குடியரசில் கடந்த புதன்கிழமை நடந்த தபூர் தடகளப் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் ஹிமா தங்கம் வென்றிருந்தார்.
ஆக கடந்த 2-ம் தேதியில் இருந்து ஹிமா தாஸ் 5-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான ஹிமா தாஸ்" திங் எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படுகிறார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment