Wednesday 31 July 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'' பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?..''
.........................................
பிரச்சனை என்றால் என்ன? அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா? நிச்சயமாக கிடையாது.
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையான பிரச்னைகள் நம் எண்ணங்களில்தான் இருக்கின்றன.
''இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்று பெரிய மனிதர்களாக இருக்கும் பலரும் மிகவும் ஏழ்மையான பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள்தான்.
நமக்கு வரும் பிரச்சனைகள் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ, பணி செய்யும் மேலதிகாரிலிடமோ நம் சூழ்நிலையிலோ இல்லை. அது நம் மனதில் இருக்கிறது.
ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் மதிய உணவு இடை வேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும்.( பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம் நடக்க வேண்டும்.
ஒரு முறை ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள்.
அந்த அதிகாரி பாவம்.. தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்து விடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார்.
பாதி தூரம் கடந்தவுடன் ""என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்."
"உங்கள் தலையில வச்ச பேப்பர் வெயிட்டை நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் முன்பே எடுத்து விட்டோம்.
இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே! பிரமாதம் என்றார்கள்..
ஆம்.,நண்பர்களே..,
இது நகைச்சுவை அல்ல;
இது வாழ்வியல் விளக்கம்.
இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக் கொண்டும்,நாமே உருவாக்கிக் கொண்டும் இருப்பதால்தான்., நாம் பல வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டி ருக்கிறோம்...💐🙏🏻🌺

No comments:

Post a Comment