Monday 31 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மகிழ்ச்சி தருவது மனமே...*
கவலை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அரசன் இருந்தான்.
ஒருநாள் தனது சபையைக் கூட்டி, ‘‘எல்லாரும் பற்றி பேசுகிறார்களே... கவலை என்றால் என்ன? 
கவலை எப்படியிருக்கும்?
என்ன செய்யும்…?’’ எனக் கேட்டான்.
‘‘இது தேவையில்லாத விஷயம் மன்னரே! அதைப் பற்றியெல்லாம் இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை...’’ என்றார் அமைச்சர்.
மன்னர் விடாப்பிடியாக ‘"எனக்குக் கவலையைப் பற்றி உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாராவது விளக்கிச் சொல்லுங்கள்…’’ என்றார்.
ஆளாளுக்கு கவலையைப் பற்றி விளக்கம் சொன்னார்கள்.
‘‘இவ்வளவுதானா கவலை? இது வெறும் பயம். இதற்குப் போயா நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வருந்துகிறீர்கள்?’’ என மன்னர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்தார்.
‘கவலை என்பதை மன்னருக்கு எப்படி உணர்த்துவது?’ என எவருக்கும் தெரியவில்லை.
அப்போது அரண்மனை ஓவியன், ‘‘மன்னரே நான் கவலையை ஓவியமாக வரைந்திருக்கிறேன். பாருங்கள்…’’ எனக் காட்டினான்.
அதை வாங்கிப் பார்த்த மன்னன் திகைத்துப் போனார்.
காரணம், அதில் அவரது உருவம் மெலிந்து, நரைத்து, முகமெல்லாம் சுருக்கம் விழுந்து, ஒரு நோயாளியைப் போல் இருந்தது.
அவர் ஆத்திரத்தில் ‘‘முதுமையில் நான் இப்படி ஆகிவிடுவேனா..?’’ எனக் கேட்டார்.
அதற்கு ஓவியன் ‘‘முதுமையில் நீங்கள் இப்படி ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று பதில் சொன்னான்.
‘‘இதை எப்படி தடுப்பது? வாழ்நாள் முழுவதும் இதே இளமையுடன் சந்தோஷத்துடன் எப்படி வாழ்வது?” எனக் கேட்டார் மன்னர்.
ஒருவரிடமும் பதில் இல்லை.
அன்றிரவு மன்னரால் உறங்க முடியவில்லை.
மறுநாள் சபைக்கு வந்தபோது அமைச்சர் சொன்னார்:
‘‘மன்னா உங்கள் முகத்தில் கவலை படர்ந்திருக்கிறது. மனித மனதில் ஒரேயொரு கவலை புகுந்துவிட்டால் போதும், அது பெருகி வளர்ந்து விடும். இனி நீங்கள் நினைத்தாலும் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’ என்றார்
மன்னர் வருத்தமான குரலில் கேட்டார், ‘‘முதுமையில் நான் மெலிந்து நோயாளி போலாகி விடுவேனா..?’’
‘‘இது உங்கள் குரல் இல்லை. கவலையின் குரல் மன்னா! இனி, உங்களால் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’ என்றார் அமைச்சர்.
மன்னர்
கவலையில்
மூழ்க தொடங்கினார்.
ஆக...
கவலை, மகிழ்ச்சி போன்ற தீய மற்றும் நல்ல உணர்வுகள் அனைத்தும் நமது எண்ணத்தில் (சித்தத்தில்) இருந்து தான் தொடங்குகின்றன...
ஆகவே, சித்தம் தெளிவாக இருந்தால் தீய சக்திகள் (உணர்வுகள்) நெருங்காது...
இவ்வாறு தவறான எண்ணங்களை விலக்கியே பேரின்ப நிலையை பெற்றார்கள் நம் சித்தர்கள்...
*மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை...*
என்றார்கள் சித்தர்கள்.
ஆக, கவலை போன்ற தவறான உணர்வுகளை போக்க...
உண்மையான சித்தர்களை அறிவோம்...
அவர்கள் கூறிய கருத்துக்களை கற்போம்...
அதன் வழி நடப்போம்...
நம் வாழ்க்கை மகிழ்ச்சியில் திழைக்க... 💐
நன்றி அறிவானநந்தம்

No comments:

Post a Comment