Monday 24 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பெரிய துறவி ஒருவர் தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒருமுறை அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். செல்லும் இடங்களில் தன் பக்தர்களுக்குக் கொடுப்பதற்காக 50 கிராம் அளவுள்ள விபூதி பாக்கெட்டுகளை ஒரு ஸ¥ட் கேஸ் நிறையத் தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்றார்.
நியூயார்க் விமான நிலயத்தில் அந்தப்பெட்டி மாட்டிக்கொண்டு விட்டது. சுங்க இலாகா அதிகாரிகள் அந்தப் பெட்டியையைப் பிடித்து நிறுத்திவிட்டார்கள். அதன் கைப்பிடி மீது கட்டப்பெற்றிருந்த அடையாள அட்டையைப் பார்த்து அதன் உரிமையாளரான துறவியைத் தங்கள் அறைக்கு வரச் செய்து விசாரித்தார்கள். ஸ்கேன் செய்யும் இயந்திரத்தில் தங்கள் பார்வையில் பட்ட அந்தச் சிறு சிறு பொட்டலங்கள் அனைத்தும் கஞ்சாப் பொட்டலங்களாக இருக்குமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு. அதனால்தான் விசாரனை!
பெட்டி திறக்கப்பட்டது.ஒரு பொட்டலம் பிரித்துப் பார்க்கப்பட்டது. பிரித்த அதிகாரியால் விபூதியின் நெறு நெறுப்பையும், வாசனையை மட்டுமே உணர முடிந்தது. வேறு ஒன்றையும் அவரால் தெரிந்து கொள்ளமுடியவில்லை.
துறவியார் தனது தெளிவான ஆங்கிலத்தில் அதைப்பற்றிய முழு விபரங்களையும், தான் யார் என்பதையும், தன்னை அழைக்க வந்திருப் பவர்கள் யார் யார் என்பதனையும் சொன்னார்
சற்று சமாதானமடைந்த அதிகாரி, ஒரே ஒரு சந்தேகம் – அதை மட்டும் தெளிவு படுத்துங்கள் என்று சொன்னதோடு மேலும் கேட்டார்.
” மொத்தத்தில் இது மாட்டுச்சாணத்தில் செய்த சாம்பல் என்கிறீர்கள். ஓக்கே.. ஆனால் இந்த சாம்பலை உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தினமும் பூசிக்கொள்வதன் நோக்கம் என்ன? தினமும் ஏன் அதை பூசிக்கொள்ள வேண்டும்? ”
துறவியார் கீழ்க்கண்டவாறு பதிலுறைக்கலானார்
ஆன்மா (உயிர்), மனம் (உள்ளம்), அறிவு என்ற மூன்று கட்சிக் கூட்டணியால் ஆனதுதான் நமது உடம்பு. அறிவை ஓரம் கட்டிவிட்டு, மனம் தன்னிச்சையாகச் செயல்படும் போது, மனிதன் மது, மாது, போதை வஸ்துக்கள், தீய உணவுப்பழக்கங்கள் என்று கெட்டுப்போய் விடுகின்றான். பொருள் ஈட்டுவதிலும் அவன் நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றான் அதர்மம் அவனோடு கைகோர்த்துவிடுகின்றது.
கடைசியில் தன் உடல் நலம் கெட்டு, ஆட்டம் போட்ட கூட்டணி உடைந்து மருத்துவர்களால் கைவிடப்படும்போதுதான் தன் தவறுகளை உணர்கிறான். அப்போது உணர்ந்து என்ன பயன்? ஆகவேதான் சிறுவயதில் இருந்தே நாங்கள் பயிற்சி கொடுக்கின்றோம். அழியப்போகும் உடம்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே- உடம்பு கேட்பதையெல்லாம் கொடுக்காதே -ஒருநாள் அது எரிந்து சாம்பல் ஆகப்போகின்றது. ஆகவே உன் ஆன்மாவிற்கும், அறிவுற்கும் உகந்தது எதுவோ அதை மட்டும் செய்! மனதை நெறிப்படுத்து இந்த உடம்பு சாம்பல் ஆகப் போகிறது என்பதை நினைவிற் கொள்ள தினமும் இரண்டு முறையாவது இந்த சாம்பலிலான திருநீற்றைப்பூசிக்கொள் என்று சொல்லிக்கொடுத்து பூசச் செய்கின்றோம்!”
துறவியாரின் தெளிவான விளக்கத்தினால் அதிர்ந்துபோன அந்த அமெரிக்கச் சுங்க அதிகாரி மெல்லிய குரலில் சொன்னார்.
“சுவாமிஜீ, எனக்கு இரண்டு பொட்டலங்களையும், உங்கள் இந்திய முகவரியையும் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். உங்களை சிரமப் படுத்தியதற்கும் எங்களை மன்னியுங்கள்! “. படித்ததில் பிடித்தது
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment