Friday 28 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஊடகங்கள் மீண்டும் எழுச்சி பெற்றிட.......
மீடியா மக்கள் நம்மை கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த பதிவு..
அது ஆசிரியர் குழுவே அல்ல..கூகுளாண்டவர் குழு...
சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்
களத்தின் காமிராமேன் செய்தியாளன், ஆசிரியர் குழு..இவர்கள்தான் ஊடக உலகின் மிக முக்கியமான பகுதி. இவர்களுக்கு மேலும் கீழும் உள்ளவர்கள், சப்போர்ட் ரோல்தான்.
ஒரு செய்தியாளன், அதிகாரிகள், அரசியல் பிரமுகர் என பல மட்டத்தில் நம்பகத்தன்மையுடன் பழகி தனக்கென செய்தி ஆதார களத்தைஉருவாக்கிக் கொள்ளவேண்டும்.
யார் சொன்னாலும் அவற்றை ஒருமுறை நேரடியாக விசாரித்து பார்ப்பது அவசியம். கிராஸ் செக்கிங் என்பது மிகமிகமிகமிக அவசியம்.
அதுமட்டுமின்றி துறைகள் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஐபிசி, சிஆர்பிசி போன்றவற்றை கரைத்து குடிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் முக்கிய குற்றங்கள் தொடர்பான பிரிவுகளாவது தெரிந்திருக்கவேண்டும்.
..
காலையில் ஒரு மணிநேரமாவது ஒதுக்கி பல பத்திரிகைகளின் செய்திகளை ஆழ்ந்து படித்தால்தான் ரிப்போர்ட் டிங்கில் உள்ள பல வித்தியாசங்கள் தெரியவரும்.
செய்தியாளார்கள் சந்திப்புக்கு போகும்முன், யாரை சந்திக்கபோகிறோமோ அவர் மற்றும் அவரின் அரசியல் வரலாற்றை தெரிந்துகொண்டு, அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை தாமோ அல்லது மூத்தவர்களை கேட்டுத்தெரிந்தோ செல்வது நலம்.
கேள்வி கேட்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் நாம் கற்க தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள் ளன என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்
நாம் பேசுவதை விட நமது செய்தியை மக்கள் பேச வேண்டும் என்று நினைத்தால் தன்னை முன்னிலைப் படுத்தும் மனநிலை குறையும்.
ஒரு தரப்புக்கு ஆதரவாளனாகவே காட்டிக்கொண்டு அரசியல் தலைவர்களிடம் தனிப்பட்டநோக்கத்துடன் கேள்வி கேட்டு எரிச்சலூட்டுவது கேவலமான செயல்.
நான் பிரஸ், நான் கேட்டால் நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற திமிர்தனத்தமான மனநோய்க்கு ஆளாகாமல், ஆவேசமே படாமல் பொறுமையாக பணிவாக, நாசூக்காக செயல்பட்டு கருத்துக்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதுதான் செய்தியாளனுக்கு முழு அழகு
செய்தியாளனுக்கு அடுத்தபடி செய்தி ஆசிரியர் குழு.. பத்திரிகையோ டீவியோ, இந்தக்குழுதான் முழுபலமே..
இங்கே தேவைப்படுவது சகல துறை சார்ந்த விஷயங் களில் தேவையான அளவு ஞானம்.. அதிகாரி களின் அதிகார வரம்பு, அரசியல் வரலாறு, சட்ட அறிவு, எந்த ஊர் எந்தப்பக்கம் இருக்கிறது என்ற குறைந்தபட்ச அறிவு..
எல்லாவற்றையும் விட செய்தியில் லாஜிக் இடிக்கிறதா என்று ஒன்றுக்கு பத்துதடவை குடைந்து பார்க்கிற சந்தேக புத்தி… இத்துடன் மக்களுக்கு எளிமையாக புரிய வைக்கிற சுருக்கமான எழுத்து நடை.. செய்தியாளர் களுக்கு விஷயங்களை விளக்கி வேலை வாங்க வேண்டிய பாங்கு.. இவையெல்லாம் இருந்தால் செய்திக்கு கிடைக்கும் வலிமையே வேறு..
செய்தியாளன் போனில் வந்தால், பெயர், இடம் சம்பவம் பற்றி கேட்டுக்கொண்டு செய்தி ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் அந்த செய்திக்கு தங்கள் அறிவு பலத்தால் செழுமைப்படுத்தி தரவேண்டும்.
ஆனால் செய்தியாளன் சொல்லித்தான் எல்லா விஷயமும் தெரியவரும் என்றால் அது ஆசிரியர் குழுவே அல்ல..பக்கா, கூகுளாண்டவர் குழு...கூகுளிலேயே அவ்வளவு தவறான தகவல்கள் என்பது தனிக்கதை
மேட்டூர் அணை தொடர்பாக செய்தியாளர் போனில் வருகின்றான் என்றால் அவர் பேசுவதற்கு முன்பே, எடிட்டோரியலில் உள்ளவருக்கு அணையின் உயரம் கொள்ளளவு, பாசன பரப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் முன் கூட்டியே மூளைக்கு வந்து நிற்கவேண்டும்.
மேட்டூர் அணையில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு…என்று செய்தி யாளன் சொன்னால், ஏம்பா அணையே 1934ல்தாம்பா கட்டினார்கள் என்று கொக்கிபோடும் அளவுக்கு உஷார் தன்மை இருக்க வேண்டும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த காலத்தில்நடிகை பானுமதிக்கும் பாரதியாருக் கும் கள்ளத்தொடர்பு இருந்தது என்று அளந்துவிட்டால் அதை சோஷியல் மீடியாவில் அதை அப்படியே நம்புகிற ஒரு கூட்டம் இருக்கிறதே அதைப்போல் படித்த முட்டாள் மூளை கணக்காக இருக்கக்கூடாது.
அடேய் கூறுகெட்ட குக்கர்களே, பாரதியார் செத்துப்போ; நாலு வருஷம் கழிச்சிதானடா பானுமதியே பொறந்தாங்கன்னு நக்கலடிக்கிற அளவுக்கு ஆண்டுதோறுமான நிகழ்வுகள் குறித்த வரலாற்று அறிவு வேண்டும்.
உச்சகட்டமாக, ஒன்றுமே இல்லாத விஷயங்களுக் கெல்லாம் செய்தியாளனே திரையில் சொல்லிவிட்டு போகட்டும் என சப்பை நேரலைகளில் தள்ளிவிட்டு ஸ்கிரிப்ட் எழுதும் பணியை எடிட்டோரியல் தவிர்க்கிற மோசமான நிலைமை..
மிகமிக இளவயது ஆட்களை தேர்வு செய்வு செய்தி களையே இளமையாக காட்டலாம் என்று முடிவு செய்த வர்கள், இளையவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்காததுதான் எல்லாவற்றிற்கும் கோளாறு..
நேற்று பணியில் சேர்கிறார்கள், இன்று திரையில் தெரிகி றார்கள் முக்கியமான நேரலைகளில்.. ஸ்டுடியோ, செய்தியாளன், கருத்து சொல்பவர் என அனைத்து தரப்பிலும் கடுப்பாகிற அளவிற்கு ரிபீட்டுகள்..
விஷயம் தெரியாதவர்களுக்கு, மேலே இருப்பவர்கள் அனைத்து வகைகளிலும் விளக்கி வழிநடத்தி செல்ல வேண்டும். அது அவர்களின் கடமையும்கூட.
ஆனால் இளையவர்கள் கேட்டால் ''இதுகூடத் தெரியாம ஏன் வேலைக்கு வந்தே?''என்று ஏளனப்படுத் தினால்.. ஒன்று மூத்தவர்கள் சோம்பேறிகளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கே விஷயம் தெரியாமல் இருக்கவேண்டும்
ஊடகத்தின் மீது விழும் விமர்சனங்களுக்காக, அது தொடர்பானோர் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது...
(சில ஆண்டுகளுக்கு முன் போட்ட பதிவு. சில சேர்ப்புகளுடன்)
நன்றி :எழுமலை வெங்கடேசன்

No comments:

Post a Comment