Monday 24 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சுயமரியாதைச் சுடர்.....
#டிசம்பர்24..
..
பெரியார்..
யாரிந்த ஈரோட்டு கிழவன்.
கூன் விழுந்த என் அப்பனை
தூக்கி நிறுத்தியவன்..
கக்கத்தில் வைத்திருந்த துண்டை
தோளில் போட்டு அழகுபார்த்தவன்..
கடவுள் மறுப்பல்ல என் கொள்கை
ஏற்றதாழ்வை சரிசெய்தலே என்றான்
கடவுள் பெயரில் பிரித்துவைத்ததால்
அந்த கடவுளையே எதிர்க்கிறேன் என்றவன்..
..
எல்லோரும் வந்தார்..
மதவாதிகள்..
மார்க்கம் பேசியவர்..
இலக்கணம் வடித்தவர்
இன்ப இலக்கியம் சொன்னவர்
அறிவை.. ஆய்ந்து
திறம்பட சொன்னவர்..
திறமையாளர்கள்..
ஆன்மீக பேசியவர்..
அரசியல், நிர்வாகம்
மடமை மூடம்..
முதிர்ந்த சொல்..
விவேகம் ,வீரம்.
சமூகசிந்தனை சமுதாய நலன்
வாழ்வியல் சொன்னவர்..
என வந்தார்கள் ..சான்றோர்கள் பலர்..
எல்லோரும் ..
தான் சொல்வதை மட்டுமே சரியென்றார்கள்..
ஆனால்..
இந்த பெருங்கிழவன் மட்டுமே..
யார் சொன்னாலும்
எதைப்பற்றியென்றாலும்
எப்படி சொன்னாலும்..
ஏன் நானே சொன்னாலும்..
உன் அறிவேற்காததை ஏற்காதே என்றான்..
அதனால் இன்னமும் நிலைத்து நிற்கிறான்..
..
எல்லாவற்றிக்கும் தீர்வை
சமூகநீதியின் அளவுகோலில் பார்த்த
பேரறிவாளன்
ஆண்குழந்தையை
படிக்கவைக்காவிட்டாலும்
பெண்குழந்தையை
படிக்கவையுங்கள்
வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது
படிக்கவைக்க சொன்ன தொலைக்காளன்
எல்லாவற்றிலும் முற்போக்கு
எழுத்தில் பேச்சில் எப்போதும்
இருந்ததில்லை எப்போதும் பிற்போக்கு..
..
தமிழ் மண்ணையும்
தமிழனையும்
எப்போதும்
காத்துநிற்கும்.. ஆயுதம்..
ஆம்..
பெரியார்..
பகைவர் குலைநடுங்கும்
எங்கள் #பேராயுதம்..
..
#பெரியார்நினைவில்44
கலைஞரின் வரிகளோடு முடிக்கிறேன்
பம்பரமும் சுற்றிய பின் ஓய்ந்துவிடும்
படுகிழமாய் ஆனப்பின்பும் பம்பரம் போல்
சுற்றுகிறார்.. #எம்பெரியார்..
..
Aalanci Spm
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment