Tuesday 9 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🙏மேன்மக்கள் மேன்மக்களே🙏
உ. வே. சாமிநாத ஐயர் தமது மரணப்படுக்கையில் இருக்கும் போது, திருப்புகழ் செங்கல்வராய பிள்ளை
உ.வே.சாமிநாத ஐயரை சந்திக்கிறார். ஐயரின் கால்களை தம் கரங்களால் பற்றுகிறார் பிள்ளை. ஐயர் அவர்களோ பதறி எழுந்து அவர் கரங்களைப் பற்றி என்ன காரியம் செய்கிறீர்கள் என்கிறார். ‘சங்க இலக்கியங்களைத் தேடி அலைந்த கால்கள் அவை. அவற்றுக்கு மரியாதை செய்தேன்’ என்கிறார் பிள்ளை.
செங்கல்வராய பிள்ளையின் கரங்களை கண்களில் ஒத்தி ‘திருப்புகழை தேடி சேகரித்து பதிப்பித்த கரங்கள் இவை’ என்கிறார் தமிழ்தாத்தா.
சாகித்திய அகாதமி வெளியிட்ட செங்கல்வராய பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இந்நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை சொல்லும் போது நெகிழ்ந்து போய் பேரா. சோ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் ‘அவர்கள் தமிழுக்காக வாழ்ந்தார்கள்.
நாம் தமிழை வைத்து வாழ்கிறோம்’ என்பார்.
இப்படிப்பட்ட பெரியவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் இன்றைக்கு படும்பாடு மிகுந்த வேதனையைத் தருவது
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு தினம் நேற்று 28/4/2017

No comments:

Post a Comment