Thursday 11 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌼மீனாட்சி அம்மனின் ரோஸ் பீட்டர் காலணிகள்👢👢
திரு ரோஸ் பீட்டர் என்பவர் மதுரைக்கு 1812 முதல் 1828 வரை கலெக்டராக இருந்தார். மக்கள் மீனாட்சியை வழிபடுவது கண்டு அவருக்கு ஆச்சரியம். ஆனால் அவருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இருந்தாலும் அவருக்கு அம்பிகை மீனாக்ஷி மீது அளவு கடந்த மரியாதை. இவ்வளவு மக்கள் வழிபடும் அந்த மீனாக்ஷி பற்றி சிந்தனை அதிகம். ஒரு சமயம் பெரும் மழை இடி எடுத்துக்கொண்டிருக்கும் போது இரவு வேளையில் அந்த கலெக்டர் தன் "கலெக்டர் மாளிகை" (தற்போதும் உள்ளது) விட்டு தனியே தூக்கத்தில் வெளியே சென்றார். காவலர்களுக்கு கலக்கம். ஆனால் எதிர்பாராத படி அவர் இருந்த அரைமீது பெரும் இடி விழுந்து சேதமாகிவிட்டது. அப்போதுதான் கலெக்டருக்கு சுய நினைவு வந்தது. ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல் விழித்துக் கொண்டிருந்த அவரிடம் அவர் உதவியாளர்கள் கேட்டபோது, ஒரு இளம் பெண் -- நான் கனவில் பார்த்துக் கொண்டிருந்த அந்த மீனாட்சிபோல், நகைகள் போட்டுக்கொண்டு, என்னை முன்னே அழைத்துச்செல்ல நானும் அந்த தெய்வ உருவத்தின் பின் சென்றேன் என்றார். பிறகு உணர்ந்தார். அது தான் மனசால் வணங்கிய அம்பிகை மீனாட்சிதான் என்று. தன்னை காப்பாத்திய அந்த அம்பிகைக்கு ஏதாவது ஒரு காணிக்கை செய்ய விரும்பி, கோவில் நிர்வாகத்தினரிடம், அம்பிகைக்கு இல்லாத ஒரு ஆபரணம் சொல்லுங்கள் அதை நான் காணிக்கையாக தர விரும்புகிறேன் என்றார். அவர்களும், அம்பிகைக்கு ஒரு காலணி தாருங்கள் என்றனர்.
கலெக்டர் தங்கத்தால் இரண்டு காலனி செய்து, அதில் 412 பவளங்களும், 72 மரகதக் கற்கள் - 80 வைரக்கற்கள் பொருத்தி - அதில் ""பீட்டர்"" என்று பதித்து காணிக்கையாக கொடுத்தார். இந்த காலனி இன்றும் ""சித்திரைத்திருவிழா"" காலத்தில் அணிவிப்பார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment