Monday 22 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொடுவாயில் எரிவாயு மயானம் திறப்பு!!
பிறக்கும்போது எதையும் நாம் இந்த பூமிக்கு கொண்டு வரவில்லை. இறந்த பின்பும் நாம் எதையும் எடுத்து செல்லப் போவதில்லை.
இடைப்பட்ட காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதைதான் விட்டுச் செல்கிறோம்.
By DIN | Published on : 22nd May 2017 07:45 AM
கொடுவாயில் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 3.6 கோடியில் அமைக்கப்பட்ட எரிவாயு மயானம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன், திட்டத் தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எரிவாயு மயானத்தை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் கலந்து கொண்டு திரைப்பட நடிகர் சிவகுமார் பேசியதாவது:
பிறக்கும்போது எதையும் நாம் இந்த பூமிக்கு கொண்டு வரவில்லை. இறந்த பின்பும் நாம் எதையும் எடுத்து செல்லப் போவதில்லை.
இடைப்பட்ட காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதைதான் விட்டுச் செல்கிறோம். அதுதான் தலைமுறைக்கும் நம்முடைய பெயரை நிலை நிறுத்தும். இன்றைய பெற்றோருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் அளவுக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்து வைத்து குழந்தைகளை சோம்பேறி ஆக்காதீர்கள்.
அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும், கல்வியையும், நல்வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதையும் கற்றுத் தந்து உழைக்க ஊக்கப்படுத்துங்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை சமுதாய வளர்ச்சிக்கு ஒதுக்கி நாடு முன்னேற பாடுபடுங்கள் என்றார்.
பாராட்டுக்குரியது நடிகர் சிவகுமார் பேச்சு

No comments:

Post a Comment