Thursday 11 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*தமிழின் வலைதள ஆதிக்கம் ;*
,,,
கூகுளின் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் துணை தலைவர் ராஜன் ஆனந்தன் இது பற்றி கூறுகையில்,
“இந்தியாவில் இணையத்தில் ஆங்கிலத்திற்கான ஆயுள் முடிந்து வருகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்த 20 கோடி மக்களும் இணையத்தில் இருக்கிறார்கள். புதிதாக சேரும் நபர்களில், 90 விழுக்காடு மக்கள் ஆங்கிலத்தை விட இந்திய மொழிகளையே விரும்புகிறார்கள். கிட்டத்தட்ட இணையத்தின் வளர்ச்சி இந்திய மொழி வாசகர்களை நம்பியே உள்ளது. இந்திய மொழிகளில் இணையத்தை பயன்படுத்துவோரில் 99 விழுக்காடு போன்களின் மூலம் தான் பயன்படுத்துகிறார்கள்.
,,,
*அதிகம் பயன்படுத்தப்படும் மொழி தமிழ்!*
தமிழ், ஹிந்தி, கன்னடா, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தான் இணையம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகிழ்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், இணையத்தில் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில், அதிகம் பயன்படுத்தப்படுவது தமிழ் தான். இணைய பயன்பாட்டில் தமிழில் 42 விழுக்காடு மொழிப்பெயர்ப்பு நடக்கின்றது. ஹிந்தியிலோ 39 விழுக்காடு நடைபெறுகிறது. இணைய மொழி வளர்ச்சியில் தமிழ் மொழி 74 விழுக்காடுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஹிந்தி 54 விழுக்காடு. இதனால் இந்திய மொழிகளில், தமிழுக்கான சந்தை பெரிய அளவில் உள்ளது என்று கூறலாம்.
2021ல் மராத்தி, பெங்காலி, தமிழ் ஆகிய மொழிகள் இந்திய மொழி இணைய பயன்பாட்டில் 30 விழுக்காடு வகிக்கும். மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், நகர்ப்புற மக்களை விட கிராமப்புற மக்கள் இணையத்தில் அதிக நேரம் செலவு செய்கிறார்கள்.
,,,
இந்திய மொழி பயன்படுத்துபவர்களில் 12 விழுக்காடு மட்டுமே ஆங்கில விளம்பரங்களுக்கு பதிலளிக்கிறார்கள். மீதம் உள்ள 88 விழுக்காடு மக்கள் இந்திய மொழி விளம்பரங்களுக்கே பதிலளிக்கிறார்கள்.
நன்றி கவிஞர் இரா. இரவி

No comments:

Post a Comment