Tuesday 7 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பந்தா இல்லை;
பரிவாரங்கள் இல்லை.
இவர் மீது ஊழல் வழக்குகள் இல்லை;
சிறை சென்றதும் இல்லை.
கலைஞர், புரட்சித்தலைவர், என்பது போல், இவருக்கு பட்டங்கள் இல்லை;கவுரவ டாக்டர் பட்டமும் இல்லை.
சரி, என்ன இருக்கிறது?
பட்டதாரி முதல்வர்;
கிராமத்து விவசாயியின் மகன்.
இந்தியாவில் சிறந்த நிர்வாகி என போற்றப்படும் .
அம்மா அவர்களால் , ஏற்கனவே,
இரு முறை முதல்வர் பதவிக்கு அடையாளம் காட்பட்டவர்.
ஒரு முறை அவருடைய இலாகாக்களை கவனித்தவர்.
நிர்வாகம் எப்படி ??
இவர் முதல்வராக இருந்த போது, மதக்கலவரங்கள், ஜாதி கலவரங்கள் நடந்திருக்கிறதா?
சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறதா?
தமிழகத்தை உலுக்கிய, அம்மா மரண சம்பவத்தின் போது, முதல்வராக இவர் தானே காவல் துறையை கவனித்தார்.
எந்த அசம்பாவிதமும்,தமிழகத்தில் நடக்கவில்லையே?
புயல் மழைக்கு, சேதங்களை பார்க்க உடனடியாக புறப்பட்டார்.
முழங்கால் அளவு தண்ணீரில்,
நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.
ஊடகங்களில் தகவல் பரிமாற, அமைச்சர்கள்,
அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கிறார்.
சற்றும் தாமதமின்றி,கடிதங்கள் எழுதி காத்திருக்காமல், அடுத்த சில நாட்களில், மத்திய அரசின் நிதி கேட்டு பிரதமரை சந்தித்தார்.
அரசின் பாடங்கள் பயிற்றுவித்தவர்
அம்மா தானே!
நம் மாநிலத்தில் முதல்வர் விடுமுறை நாளிலும் தலைமை செயலகம் வருகிறார்.
அதிகாரிகள்,மாற்று கட்சியினர் எளிதில் சந்திக்கலாம், விவாதிக்கலாம்.
ஐ.ஏ.எஸ்.,க்களுக்கும்,
ஆட்சி பீடத்திற்குமான இடைவெளிகளை
அகற்றி விட்டார்;
தினமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன.
முதல்வர் என்பவர் அரசின் ஊழியர்;
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அரசு ஊழியர் போல் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.
முதல்வர் காரிலேயே, அமைச்சர்கள் கூடவே செல்லலாம்.
கேரளா, ஆந்திரா, குஜராத், டில்லி போன்ற மாநிலங்களில் இப்படித்தானே நடக்கிறது.
அதை எல்லாம் பாராட்டும் ஊடகங்கள், அது முதல்வர் பன்னீர் என்கிற போது, கண்டும் காணாது இருக்கின்றன.
தலைமை செயலர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அப்போதும்,
அங்கே இருந்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.
இது பற்றி இதுவரை, அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
அவர் முதல்வர் என்ற பதவியை பயன்படுத்தி,
ராமமோகன ராவ் மீதான
ரெய்டு நடவடிக்கையை தடுத்தாரா? இல்லையே!
சட்டம் அதன் கடமையை செய்யட்டும் என்று இருந்தார்.
அது, அவருடைய பாணி.
உடனடியாக, புதிய தலைமை செயலர் நியமனம் ஆகட்டும்; யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் பணிந்தாரா? இல்லையே!
பணிமூப்பு அடிப்படையில் தான்,
புதிய தலைமை செயலரை நியமித்தார்.
இப்படி, முதல்வர் பன்னீரின் ஆட்சியில், மக்கள் யாரும் குறை காணவில்லை;
இப்படி ஆட்சி நடந்தால் போதும் ... எனவே, எம்.எல்.ஏ.,க்களே, அமைச்சர்களே...
கொஞ்சம் பொறுத்திருங்கள் ...
முதல்வர் பன்னீருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்
அவரை நான்கரை ஆண்டுகள் ஆளவிடுங்கள்.
தமிழகம் வளர்ச்சியின் பாதைக்கு செல்ல வழிவிடுங்கள்.
அம்மா முதல்வராக வேண்டும் என்று மக்கள் ஓட்டளித்தனர். இன்னும் இருக்கும் நான்கரை ஆண்டுகள், அவரின் விசுவாசி,
அவர் ஒரு முறை கூட அமைச்சர் பதவியில் இருந்து நீக்காத, கட்சியை விட்டு நீக்காத,
பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டும் .
என்று தான் மக்களும்,
உண்மையான அ.தி.மு.க., தொண்டர்களும் விரும்புகின்றனர்
நண்பா் தி௫ லெட்சுமணன் பதிவு
சிந்திக்க வேண்டிய நிலை

No comments:

Post a Comment