Friday 17 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மதிய உணவு
------------------------
வாழ்க்கை- கவிஞர் வாலியின் விளக்கம்.
------------------------------------
நொந்தாரையும், நொந்து நொந்து வெந்தாரையும் பார்த்து வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கின்றது
"வா" என்று.
முதல் இரண்டு எழுத்தும் சேர்த்து
"வாழ்" என்று ஆசீர்வதிக்கிறது.
எதை நம்பி என்ற கேள்விக்கு நான்காம் எழுத்து நவில்கின்றது விடை"கை" என்று.
அது மட்டுமல்ல, கை கொண்டு உழைத்தாலும், காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று சொல்கிறது
முதல், மூன்றாம், நான்காம் எழுத்து சேர்ந்து- "வாக்கை".
மேற்சொன்ன கருத்தை புரிந்து உழைத்தால்
நீ பெறுவது என்னவென்று முதல் எழுத்தும், நான்காம் எழுத்தும் சேர்ந்து சொல்வது " வாகை".
வா, வாழ், கை, வாக்கை, வாகை என்று 5 சொற்களை கொண்ட ஒரே சொல் "வாழ்க்கை"
என்னே நம் தமிழின்
உயர்வு.
வாழ்க்கை நாய்க்குடை அல்ல, நிழற்குடை.
வாழ்க்கையை உணரந்து வாழ்.

No comments:

Post a Comment