Saturday 25 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது.
புத்தகங்களை துணை கொள்.
உடலுழைப்பை அதிகரி.
சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
குளிர் நீரில் குளி.
கொஞ்சமாய் சாப்பிடு.
தியானம் கைகொள்.
இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
உணவில் கீரை சேர்த்துக் கொள்.
எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
ஆத்திரம் அகற்று.
கேலிக்கு புன்னகை தா.
கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
நட்புக்கு நட்பு செய்.
வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
அன்பு செய்தால் நன்றி சொல்.
இதமாகப் பேசு.
நீ ஜெயிப்பாய். இது நிச்சயம்.
வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

No comments:

Post a Comment