Monday 20 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மயிலாப்பூர் எம் எல் ஏ ஆர் நடராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ள க௫த்து ஏற்புடையது பாராட்டுக்கள்
ஆர்.நட்ராஜ் தன், ‛பேஸ்புக்' பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பு ஜனநாயக விரோத அரசியலை நினைவுப்படுத்துகிறது. புதிய பாதையில் செல்வதற்கான வாய்ப்பு தமிழக எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்தது. ஆனால், மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் தவற விட்டு விட்டனர். தங்களின் சிறப்பான நடவடிக்கை மூலம் இளைஞர்களின் கவனத்தை அவர்கள் ஈர்த்து இருக்கலாம். ஆனால், அவர்கள் அதை தவற விட்டு விட்டனர். சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஜனநாயக விரோத முறையில் கொண்டு வரப்பட்டது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நடந்த நிகழ்வுகள் உத்தரகாண்ட் நிகழ்வை விட மிக மோசமாக இருந்தன. ‛எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கட்டும். அதன் பிறகு ஓட்டெடுப்பு நடத்தலாம்' என, சட்டசபையில் நான் பேசினேன்.
----------
ஜெ.,யின் தாரக மந்திரம் : ‛மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரம். எனவே, மக்களின் எண்ணங்களை தான் சட்டசபையில் பிரதிபலிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை நான் எடுத்துரைத்தேன்.சட்டசபை என்பது மக்களின் பிரச்னைகள் பற்றி பேச வேண்டிய சபை. எனவே அவர்களின் கருத்தை கேட்டு அதன் பிறகு ஓட்டெடுப்பை நடத்தலாம் என்று கூறினேன்.
-----------
கண்டிக்கிறேன்
எங்கள் கருத்துக்களை உன்னிப்பாக கேட்ட சபாநாயகர் சபையை ஒத்தி வைக்க மறுத்து விட்டார்; ரகசிய ஓட்டெடுப்பு நடத்த முடியாது என கூறி விட்டார். அதற்கு பதில் அவசர அவசரமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. சட்டசபையில் நடந்த மோசமான சம்பவங்கள், தர்ணா போராட்டம், சபாநாயகரை பிடித்து இழுக்க முயன்றது போன்றவை மிகவும் கண்டிக்கதக்கது. அதை நானும் கண்டிக்கிறேன்.
---------
கடைசியாக, நான் உட்பட, 11 பேர் எதிர்ப்பு ஓட்டு போட்டோம்; 122 பேர் ஆதரித்து ஓட்டு போட்டனர். இதன் மூலம் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஓட்டெடுப்பில் தி.மு.க., - காங்., உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. கட்சியின் கொறடா உத்தரவை நான் மீறியதால், நடவடிக்கை பாயும் என்ற சூழல் உள்ளது. இருப்பினும், என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது.மக்களின் எண்ணங்களை நான் பிரதிபலித்தேன் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன். பதவி என்பது எனக்கு பெரிதல்ல. சரியான விஷயங்களுக்கு ஆதரவு தர வேண்டும்; மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை எனக்கு முக்கியம். முதலில் நான் ஒரு மக்களின் சேவகன். மக்களை விட நான் அதிகாரம் மிக்கவன் என ஒரு போதும் நினைக்க மாட்டேன்.
--------------
மனசாட்சிபடி ஓட்டெடுப்பு நடக்க வேண்டும் என்பதற்காக என்னால் முடிந்த வரை செய்து பார்த்து விட்டேன். ஆனால், உங்களை போன்று நானும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். நீதி நம்மை கைவிட்டு விட்டது என்தற்காக வருத்தம் அடைந்துள்ளேன். இவ்வாறு ஆர்.நட்ராஜ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment