Saturday 21 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நான் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவன் என்பது என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நான் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் பற்றியும் குறிப்பாக ஐயன் திருவள்ளுவரைப்பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மேலும் மதுரை மாவட்டத்திலேயே எந்தப் பள்ளியும் செய்திராத வகையில் கடந்த மூன்று வருடங்களாக தமிழுக்கு என்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தமிழைப் பற்றியும் தமிழ் பண்பாட்டைப் பற்றியும் மிக விரிவானமுறையில் விளக்கும் வண்ணம் விழா எடுத்து கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு நடந்த விழாவில் மதுரை சித்திரைத் திருவிழா மற்றும் ஜல்லிக் கட்டின் பெருமைகளை விளக்கும் வண்ணம் எங்கள் மாணவர்கள் அருமையான கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அதனை அனைத்து மாணவர்களும் மற்றும் அவர்தம் பொற்றோரும் பார்த்து வியந்து பாராட்டினார்கள். இந்த ஆண்டு விழாவிற்குத் தலைமை வகித்த தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு திருமலை அவர்களும் விழாவினைப் பார்த்து வியந்து வெகுவாகப் பாராட்டினார். எந்தப் பள்ளியுமே செய்திராத அறிய சாதனை இது என்று தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
இது தவிர ஜல்லிக் கட்டு நடத்திடவும் தமிழ் பண்பாட்டினைக் காத்திடவும் தமிழ் நாட்டு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தன்னெழுச்சிப் போராட்டம் நடத்திவருவதில் மிகுந்த மகிழ்ச்சியுற்று நான் தற்போது தலைவராய் இருக்கும் சி.இ.ஓ.ஏ பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் எனக் கிட்டத்தட்ட 500 பேரையும் இணைத்து எனது தலைமையில் 19.01.2017 அன்று பள்ளியின் வாயிலில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினோம். தமிழகத்திலேயே ஒரு பள்ளியின் நிர்வாகத்தின் தலைமையில் நடந்த முதல் போராட்டம் இதுவே ஆகும்.
இதை எல்லாம் பார்த்து என்மீதும் நான்சார்திருக்கும் சி.இ.ஓ.ஏ பள்ளியின் மீதும் களங்கம் கற்பிக்கும் விதமாக நான் பீட்டா என்ற ஒரு அசிங்கமான, அருவருக்கத்தக்க அமைப்பில் தலைவராய் இருப்பதாக தவறான தகவலைப் பரப்பி என்மீது களங்கம் கற்பிக்க முயல்கிறார்கள்.
மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒழுக்கத்துடன் கொட்டும் மழையையும் பனியையும் பொருட்படுத்தாது நடத்திவரும் போராட்டத்தைத் திசை திருப்ப செய்யப்பட்ட சதியாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.
தமிழன் என்றுமே நேருக்கு நேர் மோதும் பழக்கம் கொண்டவன். புல்லுருவியாய் இருந்துகொண்டு மறைந்திருந்து வதந்திகள் பரப்புவோர் தமிழ்இனத்தினன் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கித் தலைகுனிய வேண்டும். தற்போது இச்செயலில் ஈடுபட்டிருக்கும் புல்லுருவிகளும் தமிழினத்தின் நீங்காத ஒரு அவமானச் சின்னமாகவே என்றென்றும் விளங்குகிறார்கள். தமிழனாக இரு! தமிழ்ப் புல்லுரிவிகளை அடையாளம் காண்!. மை. இராசாகிளைமாக்சு
நன்றி கே ஏ ரமேஷ்

No comments:

Post a Comment