Thursday 17 August 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க உதவும் உணவுகள்!!
நமது உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கால்சியம் சத்துக்கள் பெரிதும் உதவுகிறது.
மேலும் இந்த கால்சியம் சத்துக்கள் நம் உடம்பில் குறைந்து விட்டால், எலும்புகள் தேய்மானம் அடைவதோடு, இரத்த செல்களின் உருவாக்கத்திலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே எலும்புகளின் தேய்மானக் குறைபாடுகளை போக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தான் நல்லதாகும். இப்போது இந்த எலும்புகளின் தேய்மானத்தைத் தடுக்க உதவும் உணவுகள் பற்றி இங்கு காண்போம்.
பால் மற்று தயிரில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது. தினமும் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் கால்சியச் சத்துக்கள் நமது எலும்புகளுக்கு கிடைக்கும்.
மேலும் முட்டை, வெண்ணெய் போன்ற உணவுகளிலும் கூட புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.
அடிக்கடி நாம் உலர் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நமது எலும்புகளுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகளவு கிடைக்கும்.
எனவே ஒரு நாளைக்கு 5 உலர் அத்திபழ துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம்.
அதேபோல் பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகளில், நம் உடலுக்குத் தேவையான தாது உப்புகளுடன் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் அதிகளவு நிறைந்துள்ளது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தில் இருந்து தடுக்கலாம்.
அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிக அளவில் கால்சியம் நிறைந்துள்ளது.
எள் கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளுடன் வெல்லம் சேர்த்து உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மேலும் இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம்.
எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான மருந்து பிரண்டை என்னும் கொடி, பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது.
கருப்பு உளுந்து, கொள்ளு, ராகி மற்றும் சோயாபீன்ஸ் போன்ற உணவுகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே தினமும் நம்முடைய உணவில் இந்தப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

No comments:

Post a Comment