Monday 14 August 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குழந்தை கவிஞர் குழ. கதிரேசன் அவர்களிடம் கேட்கப்ட்ட கேள்வியிலிருந்து
குழந்தைகள் தாமாகக் கற்கும் முறை மாற்றப்பட்டு இறுக்கமான கல்விமுறை தரப்பட்டுள்ளது. இது குழந்தைகள் மத்தியில் என்ன தாக்கத்தைத் தரும் என்கிறீர்கள்?
நேரமின்மை, அவசரம், தேர்வு நெருக்கம் காரணமாக இறுக்கமான சூழ்நிலை உருவாகிறது. இது குழந்தைகளுக்குள் ஓர் இறுக்கமான மனநிலையை தோற்றுவித்து இயல்பு வாழ்க்கையில் சோர்வை உருவாக்கும். அதன் வெளிப்பாடு மகிழ்ச்சியை நோக்கியதாக இருக்கும். இன்று பள்ளி விடுமுறை என்று குழந்தைகளுக்குச் சொன்னாலே ஒரே கொண்டாட்டம், உற்சாகம்தான். விருப்பம்போல் விளையாடலாம். பொழுது போக்கலாம் என எண்ணும்போது, அவர்கள் மனத்தில் மகிழ்ச்சி பிறப்பதைப் பார்க்கிறோம். இதற்கு வாய்ப்பளித்தால், அளிக்கும் உத்திரவாதம் இருந்தால் இறுக்கமான கல்விமுறை என்பது பெருஞ்சுமையைத் தராது என்பது என் கருத்தாக வைக்கிறேன்.
நன்றி மாதவம் இதழ்

No comments:

Post a Comment